பக்கம்:தமிழின எழுச்சி.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 45

சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது எனக்கு, எதற்காக இதை எல்லாம் சொல்லுகிறார்கள் என்று. பாவாணரைப் பற்றி ஆளுக்கொரு படம் போட்டு வைத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள்; இருப்பீர்கள்; அவர்களும் ஒருவேளை என்னென்னவோ கருதலாம். தலைவரவர்கள் மிகவும் செப்பமான முறையிலே, அவர்களுக்கு என்னமுறையிலே பாவாணர் தென்படுகின்றாரோ அந்த நிலையிலே, அந்த அறிவு நுண்மையை மட்டும் எடுத்துக்கொண்டு, எந்த அளவு விளக்க வேண்டுமோ அந்த அளவிற்கு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விளக்கி அமைந்து விட்டார். ஆனால் அந்த அளவோடு பிறர் பேச்சுகள் நில்லாமல் அளவுமீறிப் போனதினாலே, என்னுடைய உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு சில உண்மைகளை மட்டும் உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன்.

பாவாணர் உரை என்று ஒன்று இந்தத் தமிழகத்திலே முளைத்த பின், இனி ஓர் உரை வருமா என்பது மிகவும் ஐயப்பாட்டுக்குரியது மட்டுமன்று; உண்மையாகவே அப்படி ஓர் உரை வருமானால், அந்த உரை பாவாணரைவிட மேம்பட்ட அறிவுடைய ஒருவரால் எழுதப்பட வேண்டுமே தவிர, என்னாலோ, அல்லது இங்கிருக்கின்ற யாராலோ எழுதப்படக்கூடாது என்று எச்சரிக்கின்றேன். (கையொலி) பாவாணருடைய உரை எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டைக் கொடுத்துவிட்டு, இதுபற்றிய இந்தச் செய்தியை இதோடு நிறுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு (மருத்துவர்) பண்டுவர் (டாக்டர்) இருக்கிறார். அவரிடத்திலே ஒருவன் காதுவலி என்று மருந்திற்காகப் போகிறான். உடனே அவர், காதிலே கொஞ்சம் மருந்தை விடுகிறார்; மருந்துவிட்டு, “இந்த வலி சரியாகப்போகும்; நீங்கள் போய்வாருங்கள்” என்று சொல்லுகிறார். மறுநாள் காதுவலி நன்றாகப் போகிறது. ஆனால் தொண்டையிலே வலியேற்படுகின்றது, அவனுக்கு. உடனே மீண்டும் அந்த மருத்துவரிடத்திலே போய், “ஐயா, காதுவலி என்று வந்தேன்; நீங்களும் அந்த மருந்தை எனக்குக் காதிலே ஊற்றினீர்கள்; காதுவலி போய்த் தொண்டை வலிக்கிறது; இதற்கொரு மருந்து கொடுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், “ஐயா, நான் காது மருத்துவம் மட்டுந்தான் பார்ப்பேன்; தொண்டை மருத்துவம் பார்க்கமாட்டேன் அதற்குத் தொண்டை மருத்துவரைப் போய்ப் பாருங்கள் என்று சொல்லி விட்டார். மறுநாள் அந்தத் தொண்டை மருத்துவரிடம் போய் மருத்துவம் பார்த்துக்கொண்டான். தொண்டைக்கு மருந்தைப்போட்டு, ஒரு மருந்தை உள்ளுக்கும் கொடுத்தார். அடுத்த நாள் வயிற்றிலே வலி