பக்கம்:தமிழின எழுச்சி.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52 - தமிழின எழுச்சி

மிஞ்சியிருந்தால் அந்த அடுத்த இனத்தாருக்கும் அடிமைத்தொழில் செய்ய வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. யாரும் இதை மறுக்கமுடியாது. நூல்களை எடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு நீங்கள் மறுக்கலாம். இதையெல்லாம் பார்த்து, கல்வி எல்லாருக்கும் உரியது என்று ஒரு கருத்தை, அந்த ஆரியக்கருத்தை மறுத்துப் பேசுகிறார் வள்ளுவர். மநுநூல் பின்னாலே எழுந்தது. ஆனால் அந்த கருத்துப் பரவியிருந்த காலம் அது, அதைத்தான் மநு எழுதி வைத்தார். (கல்வி கற்றல் என்பது ஆறாவது) ஏழாவது கல்வி கற்பித்தல் - அந்தக் கல்வி கற்பிக்கும் உரிமையை மது சூத்திரர்களுக்கோ, வைசியர்களுக்கோ, சத்திரியர்களுக்கோ கொடுக்கவில்லை. பிராமணன்தான் கல்வி கற்பிக்கவேண்டும். கல்வி கற்பதற்கும் அவனே உரியவன்; ஒருவேளை தப்பித் தவறி எங்காவது பிராமணனுடைய வீட்டிலே வேலை செய்கிற சூத்திரன் நல்லவனாக நடந்து அவனுடைய நிலையிலே அந்தப் பிராமணன் இரக்கப்பட்டு “தம்பி, நீ தெரியாமலிருக்கிறாய்; அதனாலே நான் சொல்லுகிற சில வேலைகளை ஒழுங்காகச் செய்வதில்லை. நீ கொஞ்சம் கற்றவனாகயிருந்தால் நல்ல அடிமையாக இருப்பாய்” என்று எண்ணிக் கல்வியைக் கற்றுக் கொடுத்தாலும் கூட அதை உடனே தடுக்கக்கூடிய அந்த ஆரிய மரபு, வழக்கம் அன்றிருந்தது. அதனால்தான் கல்வி கற்பிக்கவும் கூடாது என்று தடை போடப்பட்டிருக்கிறது. மீறி அப்படி அவன் கற்பித்தாலும் இவன் கற்றுக் கொள்ளக்கூடாது என்று இவனுக்கும் தடை போடப்பட்டிருக்கிறது. அவனே அதைப் படித்துக்கொண்டிருந்து, ஏதாவது இவன் அதைக்கேட்கிற நிலையில் அவன் சொல்லிக் கொண்டிருந்தாலும், இவன் ஓடிவிட வேண்டும், அந்த இடத்தை விட்டு; என்று எல்லாம் ஒழுங்காய் எழுதப்பட்டிருக்கிறது. எட்டாவது ஒற்றாடல் - ஒற்றுப்பகுதி. இந்த ஒற்றாடல்-ஒரே ஓர் அதிகாரம் போதும் மநுநூலிலிருந்து திருக்குறள் பார்த்து எழுதப் பட்டதோ அல்லது கருத்துகளை வடித்து எழுதப்பட்டதோ அன்று என்று சொல்ல. ஒற்றாடல் என்ற ஒரு செய்தியிருக்கிறதே, இந்த அரசியல் விரகு எங்குமே அர்த்தசாத்திரத்திலே கூட - குறிப்பிடவில்லை. உலக நூல்கள் உலக அரசியல்கள் என்று நமக்கு வரலாறு தருகின்ற சில அரசுகளிலே கூட ஒற்றுப்பகுதி இருந்ததாகச் சொல்ல வில்லை . பிந்திய நூல்களில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த ஒற்றாடல் மநுநூலிலே இல்லவே இல்லை. ஒற்றாட வேண்டுமென்று சொல்லுகின்ற அந்த அறப்பகுதி இல்லவே இல்லை. இது திருக்குறளிலே இருக்கிறது. உங்களுக்குத் தெரியும். ஒன்பதாவது (இதையெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசுவதற்கு நேரமில்லை ) தூது. அரசன் தூதுவர்களை அமர்த்த வேண்டும்; பலநாட்டிற்கும் தூது செல்ல வேண்டுமென்றெல்லாம்