பாவலரேறு பெருஞ்சித்திரனார் ♦ 5
1959-முதல் 1995 வரை ஐயா அவர்களின் வாழ்நாள் பொழுதுகளில் தமிழின மீட்புக்காக அவரின் அழுத்தமான எழுத்துகள், அந்தக்காலச் சூழலைக் கண்ணாடிபோல் காட்டவும் உணர்வூட்டவும் இக்கால் பெரும் பயன் நல்கக்கூடியவை.
தமிழின நலத்தில் அக்கறை கொண்ட இளைய தலைமுறையினரும், தமிழ்த்தேச வரலாற்றியல் ஆய்வு நோக்கங்கொண்டவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய நூலாக இது உள்ளது.
அவ்வகைப் பயனுக்குரிய இந் நூலைத் தென்மொழிப் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இந்த நூலை கொண்டுவருவதற்குப் பெரிதும் பணித் துணையாற்றிய அனைவருக்கும் தென்மொழிப் பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாகக் கணிப்பொறி அச்சாக்கம், வடிவமைப்பு செய்த திரு மு.இராசேசுவரிக்கும், பிழை திருத்தம் செய்த தென்மொழிப் பதிப்பக மேலாளர் திரு அழ.இளமுருகன் அவர்களுக்கும், பாவலரேறு தமிழ்க்களப் பேணுநர் க.வெ.நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கும் அழகுற அட்டைப்படத்தை வடிவமைத்தளித்த கணிப்பொறி வல்லுநர் திரு. ஒளியவன் அவர்களுக்கும் தென்மொழிப் பதிப்பகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்நூலைப் பயனாக்கிக்கொள்வது இக்காலத் தலைமுறையினரின் பெருங்கடமை.
தி.பி.2049, சுறவம் - 1 அன்புடன்,
14.01.2018 தென்மொழிப் பதிப்பகம்