பக்கம்:தமிழின எழுச்சி.pdf/64

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 63

களில் தம் சொல்லுக்குத் தாமே நடந்து காட்டிய மெய்ம்மையாளர் எத்தனைப் பேர் இருப்பர்? அவ்வாறு இல்லாதவர்களை நாம் இன்னும் நம்பிக்கொண்டு கிடப்பதில் நமக்கு ஏன் இவ்வளவு பேராசை? அதில் ஒளிந்திருக்கும் நம் தந்நலப்பற்றுக்கு நாம் இட்டிருக்கும் பொதுநலத்திரை எவ்வளவு மொத்தமானது! வலியது! இத்தனையும் சேர்ந்து நம்மை இன்னும் எத்தனை நூற்றண்டுகளுக்குத்தான் இப்படியே வைத்திருக்கப் போகின்றனவோ? உண்மையாக, அத்தனை நூற்றாண்டிற்குப் பின்னும் நாம் அப்படியே இருக்கமாட்டோம் என்பதற்கு நம்மிடம் இருக்கும் உறுதிதான் என்ன?

கட்சியென்றும், தலைமையென்றும் நாம் நம்மை எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டு கிடக்கின்றோம்! அவ்வாறு கட்டுப்பட்டுக் கிடப்பதைவேறு கடமையென்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வருகின்றோம். நமக்குள் நாம் கீழாக நடந்து கொள்வதையும் நமக்குள் நாமே ஏமாற்றிக் கொள்வதையும் கொள்ளையடிப்பதையும் பிறர் அறியக்கூடாதென்பதற்காக ஒரு பெரிய கருந்திரையிட்டு மூடிவிட விரும்புகின்றோம். அத்திரைக்குக் கண்ணியம் என்று பெயரிட்டுக் கொண்டோம். நமக்குள்நாம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஒருவரையொருவர் மடியவிழ்த்துக் கொள்ளக் கூடாதென்றும் - தேவையான பொழுதுகூட நம்மில் ஒருவனை நாம் எச்சரிக்கத் தவறி விடுகின்றோம். நம்மிடம் ஒழுக்கம் என்னும் பெயரில் ஒழுங்கின்மை வளர்ந்து வருகின்றது.

கடமை என்னும் பெயரில் கயமை மிகுந்து வருகின்றது. கண்ணியம் என்னும் பெயரில் கோழைத்தனம் ஊடுருவப் பார்க்கின்றது. நமக்குள் அரித்தெடுக்கும் பொய்மைப் புழுக்களை வைத்துக் கொண்டும், போலி ஆகுலங்களை வைத்துக் கொண்டும், நாம் எப்படியும் பிறரை வென்று விட முடியாது. நம்மிடம் உள்ள கத்திகளைத் துருப்பிடிக்க விட்டுவிட்டு, அதன் மேலுள்ள உறைகளை பளபளப்பாக்கி வைத்துக் கொண்டு, நாம் எந்தப் போரிலும் குதித்து விட முடியாது. அத்தகைய நிலை நமக்கு மேலும் மேலும் தோல்விகளையே உண்டாக்கிக் கொடுத்து, நம்மை மீண்டும் மீண்டும் இருந்த இடத்திற்கே சறுக்கிக் கொண்டுபோய் நிறுத்தும். உலகவரலாறு இப்படித்தான் கூறுகின்றது. சூழ்ச்சிகளையும் பொய், பூசல்களையும் வேரறுக்க அச்சூழ்ச்சிகளையும் பொய், பூசல்களையுமே கடைப்பிடிக்கவேண்டும் என்பது, அவர்களின் வேத, புராணங்களைப் போலவே பழைய நெறிமுறையாகும், 'வயிரத்தை வயிரத்தால்தான் அறுக்க வேண்டும்' என்னும் பழமொழி இதற்கு முழுமையாகவே பொருந்தாது. சூழ்ச்சியும், பொய்யும் வயிரம் போலும் அத்துணை வலிந்ததன்று. சூழ்ச்சியையும் பொய்யையும்