பக்கம்:தமிழின எழுச்சி.pdf/69

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68 - தமிழின எழுச்சி

வேறு எந்த மாந்த அமைப்புக்கும் இவ்வளவு சிறந்த முறையில் இருந்ததில்லை. பொதுமை உணர்வின் அடிப்படையில் இனி வரப்போவதாக அறிஞர்கள் கருதுகின்ற குமுகாய அமைப்பைத் தமிழன் மிகப் பழங்காலத்திலேயே கொண்டிருந்தான் என்றால், இக்கூற்றை வரலாற்று முறைப்படியும் இலக்கண இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் மறுக்கவே முடியாது. தமிழினத்தின்மேல் மிகப் பொறாமையும் காழ்ப்பும் கொண்டுள்ள வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்றுகள்கூட, மேற்கூறிய வலிந்த மெய்ப்பாட்டுக்கடியில் சிக்கி நசுக்குண்டு போவதை எளிதே கண்டு கொள்ளலாம்.

இவ்வளவு சிறந்த வலிதான வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழினம் கடந்த நூற்றாண்டுகளில் இழந்த பெருமைக்கு அளவே இல்லை; அந்த அவல நிகழ்ச்சிக்கு உலக வரலாற்றில் வேறு எடுத்துக்காட்டும் இல்லை. பழைய கிரேக்க, உரோம வரலாறுகளில்கூட இத்துணையளவு அவலச் சுவை நிரம்பியிருக்குமா என்பது ஐயமே! சாக்ரடீசு, பிளேட்டோ , அரிசுடாட்டில், அலெக்சாண்டர் போன்றோரின் பெயர் வரிசைக்குப் பின்னால் வருந்தத் தகுந்த பேரிழப்பு கிரேக்கத்திற்கு நேர்ந்துள்ளதாக என்னால் உணரமுடியவில்லை. அதேபோல் சீசர், அந்தனி வீழ்ச்சிக்குப் பின்னால் நேர்ந்த உரோம அழிவுகள் அவ்வளவு வருத்தத்தை எனக்குத் தரவில்லை. ஆனால் தமிழின வீழ்ச்சியின் துயரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. தொடர்ந்த வீழ்ச்சி! தொடர்ந்த அவலம்!

மிகச் சிறந்த ஓரினம் மிகமிக எளிய ஓர் இனத்தால் வீழ்த்தப்பட்டது தான் அவலச் சுவைக்கே கொள்கலனாக அமைந்துவிட்டது. மிகவும் தலைசிறந்து விளங்கிய தமிழ் நாகரிகம், நாகரிகம் என்றால் என்ன வென்று தெரியாத ஒரு நாடோடிக் கூட்டத்தால் வீழ்த்தப்பட்ட துயர நிலையை வேறு எந்த வகையாலும் நிறுத்துக் காட்டிவிட முடியாது. உலக மொழிகளெல்லாம் வேரூன்றித் துளிர்க்கவும் தழைக்கவும் தாயாக விளங்கிய ஒரு மூலமொழி, சொற்செப்பமும், பொருள் விளக்கமும், இல்லாமல், கனைப்பொலியும் உரப்பொலியும் கொண்ட ஒரு காட்டு விலங்காண்டி மொழியால் சிதைக்கப்பட்ட பான்மையினும் வரலாற்றாசிரியர்க்கு வருத்தம்தரும் நிகழ்ச்சி வேறு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மொழியின் வீழ்ச்சியே தமிழர்களின் வீழ்ச்சியாகவும், அதுவே தமிழ்நிலத்தின் வீழ்ச்சியாகவும் அமைந்து விட்டதை இக்கால் உள்ள எந்த அரசியல் தலைவரும் மறுக்கமுடியாது.

கடந்த மூவாயிரமாண்டுகளில் தமிழினம் அடைந்த மாறுதல்களில், அதன் மொழித்திரிபும், நாட்டடிமையுமே தலையாயவையாகும். தனிப்பட்ட, சிறப்பான, வலிந்த ஒரு முயற்சியாலன்றி, வேறு