இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
தமிழருக்கு ஒரு வேண்டுகோள்!
மொழி நமக்கு விழி!
நாடு நமக்கு வீடு!
மொழி யுணர்வும், நாட்டுப்பற்றும் உலக ஒற்றுமைக்கு வித்தும் எருவும் ஆகும்.
இவை இல்லாமற்போனால் அடிமை வளரும்! மிடிமை பெருகும்!
தமிழர்க்குத் தமிழ்மொழியும் தமிழ்நாடும் உயிரும் உணர்வும் ஆகும்.
அத்தகைய கலப்பில்லாத உண்மைத் தமிழ்மக்கள், தாங்கள் எவ்வாறு நடத்தல் வேண்டும் என்று அறிதல் வேண்டாமா?
- தந் தம் பெயரைத் தூய தனித்தமிழ்ப் பெயராக்குதல் வேண்டும்.
- தம் மக்கட்கும், வீட்டிற்கும் தனித்தமிழ்ப் பெயர்களையே சூட்டுதல் வேண்டும்.
- தம் பெயரொடு ஒட்டி நம்மை நாமறியாமல் அடிமைப்படுத்தும் சாதிப் பெயரைத் 'தூ' வென விரட்டுதல் வேண்டும்.
- தம்மைத் தெரிவிக்குங்கால் 'தமிழன்' என்றே கூறல் வேண்டும். அதைச் சட்டமும் மக்களும் புறக்கணித்தால் அவர்தம்மை விட்டுத் தொலைபோக வேண்டும்.