பக்கம்:தமிழின எழுச்சி.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 


தமிழர் முன்னேற்றத்தின் தடைக் கற்கள்!


ஒரு நாட்டின் பொதுவான கருத்தை அந்நாட்டிலுள்ள மிக உயர்ந்தவர் தம்மைக்கொண்டு அறிதலும், ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்தை அந்நாட்டின் மிகத் தாழ்ந்தவர் தம்மைக்கொண்டு அறிதலுமே அறிஞர் ஒப்பிய ஒரு பெரு முடிபாகும்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை உணர வேண்டுவார் அந் நாட்டின் மூன்று வளர்ச்சிகளை ஆராய்ந்தறிதல் வேண்டும். முதன்முதலில் அந்நாட்டின் அறிவியல் வளர்ச்சி, இரண்டாவது அதன் பொருளியல் வளர்ச்சி. மூன்றாவது அதன் உளவியல் வளர்ச்சி அல்லது பண்பியல் வளர்ச்சி என்பதாகும். அறிவியல் வளர்ச்சி என்பது அந்நாட்டில் உள்ளோரின் கல்வி உயர்வையும் தொழிற் சிறப்பையும் காட்டுவதாகும். கல்வி, பொதுக்கல்வி சிறப்புக்கல்வி என இரு பிரிவும் கொண்டது என்னலாம். இவற்றுள் பொதுக்கல்வி என்பது ஒவ்வொருவரும் தம்தம் வாழ்க்கைக்குப் போதுமான அளவு கற்கவேண்டிய கல்வி என்றும், சிறப்புக்கல்வி என்பது தம் வாழ்க்கைக்கு மட்டுமன்றிப் பிறர் வாழ்க்கைக்கும் பயன்படுமாறு கற்கவேண்டிய கல்வி என்றும் அறிந்து கொள்க. எழுத்தர் (Writers or Clerks), வணிகர் முதலியோர் பொதுக்கல்வி உடையவரென்றும், மருத்துவர் (Doctor) அறிவியலறிஞர் (Scientist) பொறியியல் வினைஞர் (Engineer) முதலியோர் சிறப்புக் கல்வி உடையவரென்றும் கண்டுணர்க.

இனி, தலைத்தொழில் என்பவை உழவும், நெய்வும் ஆகும். இவையே மாந்தனுக்கு வேண்டிய இன்றியமையாத் தொழில்களாதலின், இவை தலைத்தொழில் எனப் பெயர் பெறுவன. இவ்விரு தொழிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின_எழுச்சி.pdf/9&oldid=1431319" இலிருந்து மீள்விக்கப்பட்டது