பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 89
ஊரினராகவோ, ஒத்த கல்வியும், ஒத்த அகவையும் உடையவராகவோ, அல்லது ஒரே இனத்தவராகவோ, குலத்தவராகவோ சமயத்தவராகவோ, அல்லது தம்மினும் இவ்வெல்லா நிலைகளிலும் தாழ்ந்தவராகவோ ஒருவர் இருந்து, அவருக்கு ஏதோ ஒரு வகையில் - கல்வியினாலோ,புகழ் வருவதாக இருந்தால், அடுத்தவருக்கு அவர்மேல் புகழ்க் காழ்ப்பு ஏற்படலாம். இந்தப் புகழ்க் காழ்ப்பும் ஒருவகையில் பொருள் நசையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். மேலும் இதுவே அடிப்படையாக வேறு சில கருத்து வேறுபாடுகளோ, போட்டிகளோ தோன்றலாம். ஆனால் ஓருண்மையை நாம் நினைவு கொள்ளுதல் வேண்டும். புகழ்க் காழ்ப்பு மட்டும் அறிவுக் குறைவினாலோ, திறமைக் குறைவினாலோ, பண்புக் குறைவினாலோதான் ஏற்படவல்லது. அத்தகைய மனநோயாளிகளைத்தான் இந்தக் காழ்ப்புணர்வு எளிதே கவ்விக்கொள்ளும். இன்னும், புகழ் பெறுபவன் தம்மினும் இளையவனாகவோ, தன் இனத்தினும் சற்றுத் தாழ்ந்த இனத்தவனாகவோ பலநூறு மடங்குகள் பெருகிவிடும்.
இந்த உணர்வைத் திருவள்ளுவர் மிக அழகாக, மிகப் பொருத்தமான இடத்தில் வைத்துப் பேசுவார். தாம் இணைந்து, மனம் ஒத்துத் துணையாக இருந்து பணியாற்றப்போகும் அமைச்சர்களுக்குக் கூறுவதாக இதைக் கூறுகிறார். அஃதாவது, தாம் அமைச்சராக இருக்கக்கூடிய அரசர் தம்மினும் இளைய அகவையுடையவராகவோ வேறு இனத்தினராகவோ இருந்தாலும், அவரை அக்கரணியங்களுக்காக இகழாமல், என்றும் நிலைத்து நிற்கும் பேரொளியாகிய இறைவனுக்குச் சமமாகக் கருதி ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்பார்.
இளையார் இன்முறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
- (குறள் : 698)
- என்பது அவர் அறிவுரை
மனக் காழ்ப்புக் கொள்ளுவதால் மூன்று அறிவு நிலைகளை மாந்தன் இழந்து போகின்றான். உயர்வு தாழ்வு அறியும் பகுத்தறிவு, பொதுமாந்தவுணர்க்குத் தேவையான அன்புடைமை, உலக ஒப்புரவுக்குத் துணையாக நிற்கும் நடுவு நிலைமை ஆகிய இம்மூன்று நல்லுணர்வுகளையும் இப்புகழ்க் காழ்ப்பு ஒழித்துவிடக் கூடியது. இந்நல்லுணர்வுகள் அழிந்துபட்டவுடன் தன்னலவுணர்வு உள்ளம் முழுவதையும் ஆட்கொள்ளுகின்றது. அத்தன்னலவுணர்வின் எண்ணக் கனப்புகள் எப்பொழுதும் அவனை காய்ச்சி வருத்தி அமைதியிழக்கச் செய்கின்றன. அதனால் அவன் எப்பொழுதும் துன்புற்றவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மன நோயாளியாகக் காட்சியளிக்கின்றான். அவன்