பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தமிழியக்கம்

பண்டுவந்த செழும்பொருளே,
    பாடர்அடர்ந்த இருட்கடலில்
        படிந்த மக்கள்
கண்டுவந்த திருவிளக்கே,
    களிப்பருளும் செந்தமிழே,
        அன்பே, வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார்
    துறைதோறும் நின்னெழிலைத்
        துளிர்க்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே
    உளம்பதைக்கும் சொல்வதெனில்
        வாய்ப தைக்கும்.3

உடலியக்கும் நல்லுயிரே,
    உயிரியக்கும் நுண்கலையே,
        மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே,
    கண்ணான செந்தமிழே,
        அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார்
    துறைதோறும் நின்னெழிலைக்
        கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே
    நெஞ்சுபதைக் கும்பகர
        வாய்ப் தைக்கும்.4

வையத்தின் பழநிலவே
    வாழ்வுக்கோர் புத்துணர்வே,
        மயிலை, மேலோர்
ஐயத்திற் கறிவொளியே,
    ஆடல்தரும் செந்தமிழே,
        அன்பே, தீமை
செய்யத்தான் நெஞ்சுடையார்
    துறைதோறும் நின்னெழிலைத்
        தீர்க்க எண்ணும்
மெய்யைத்தான் நினைக்கையிலே
    நெஞ்சுபதைக் கும்விளக்க
        வாய்ப தைக்கும்.5