பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மலையாளிகள் தமிழ்-பொருட்சிறப்பு "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. மொழி யியல் துறையில் சொல்லின் பொருட்சிறப்புப்பற்றிய ஆராய்ச்சி சுவை நிறைந்தது; பயன் செறிந்தது. அவ்வகை யில் மலையாளிகள் தமிழில் மனங்கொள் சொற்களில் ஒவ்வொன்றின் அடி முடி பற்றி ஆராய்வதே சுவையும் பயனும் தரும். முன்னைய கட்டுரையில் ஒரு சில சொற்களின் பொருட்சிறப்புப்பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இச்சிறு கட்டுரையில் மலையாளிகள் தமிழுள் பெரும் பொருட்சிறப்பு வாய்ந்த ஐந்து சொற்களைப்பற்றி மட்டும் அவற்றின் அகர வரிசையில் ஆராய்வோம். எருத்து ஆட்டம் எருத்து ஆட்டம், அல்லது மாட்டு விளையாட்டு' சிறப்பாக மாட்டுப் பொங்கலன்று தமிழ் மலையாளிகள் நடு வண் நடைபெறும் களியாட்டு. இதுபற்றிய விரிவான குறிப்புகளை அறிஞர் தர்ஸ்டன் தமது நூலுள் குறிப்பிட் டுள்ளார். ஆனால், அஃது எழுதப்பெற்று அறை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. ஆயினும், அக்குறிப்புகள் 1. தொல்காப்பியம் - மூலம் (கழகப் பதிப்பு}-சூத்திரம் எண்: 640 2. Lumi ës: {-st} Dr. R. P. Sethu Piliai - Words and their significance, (1943-4) (ஆ) டாக்டர் மு. வாதராசனார் - மொழி நூல் (1963) - பக்கம் : 298-314 (இ) கலைக்களஞ்சியம்-தொகுதி-5-பக்கம் 256-7 13. இச்சொல் தமிழ்ப் பேரகராதியில் (Tamil Lexicon) இடம் பெறவில்லை. 4. டிெ - டிெ டிெ 5. Edgar Thruston : Castes and Tribes of Souther India (1909).Vol. IV. pp-417-9.