பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெயர்களும் உண்டு. எங்கள் குடும்பப் படித்த குடும்பம். சங்கரர் இந்நாட்டுக்கு வருமுன் பசுபதி நாதருக்கு நரபலி, மது மாமிசம் முதலியன படைத்து வழிபாடுகள் செய்து வந்தார்கள் என்பதை நேற்று உங்களுக்குச் சொன்னேன் அல்லவா? சங்கரர் வருவதற்கு முன்னர், இந்நாட்டில் சந்நியாசிகள் பெருமானைப் பூசித்து வந்தனர். இங்கு பிராமன, கூடித்திரிய, வைசிய, சூத்திரர் என்று சாதிப் பிரிவினைகள் இருந்து வருகின்றன. எல்லோரும் மது மாமிசம் அருந்தக்கூடியவர்கள். ஆகார விஷயத்தில் இங்கு அதிக வேற்றுமை கிடையாது. பெருமானுக்குப் பலியிடுதலும் மதுமாமிச நைவேதனமும் கூடாவென்று சங்கரர் நிறுத்திவிட்டார். அந்தப் பழக்க வழக்கங் களுடைய இந்த நாட்டுப் பிராமணர்கள் பெருமானைத் தொட்டுப் பூசித்தல் அநுசிதம் என்று அப்போதிருந்த அரசனிடம் எடுத்துச் சொல்லிச் சுத்த சைவர்களா யுள்ள பிராமணர்கள் தாம் பூசை செய்ய யோக்கியதை உடையவர்கள் என்பதையும் அரசனுக்குத் தெரி வித்தார். அப்படிச் சுத்த சைவர்களாக உள்ளவர்கள் எங் கிருந்து கிடைப்பார்கள் என்று கேட்ட அரசனுக்கு, விந்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பிராமண வகுப்பார் நெறியிற் சிறந்தவராகவும் (ஸ்மார்த்த வைஷ்ணவர்கள்) சைவர்களாகவும் இருப் பார்கள். அங்கிருந்து படித்த நல்ல அறிஞர்களை ஒழுக் கத்திற் சிறந்தவர்களைப் பொறுக்கியெடுத்துப் பூசைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று அவர் ஒரு திட்டமும் வகுத்துக் கொடுத்தார். முதலில் கன்னடப் பிரதேசத்தில் உள்ளவர்களில் தேர்ந்தெடுக்கலாம். அதுவும் பொருந் தாவிட்டால் ஆந்திர நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இந்த மூன்றிலும் இதற்குப் பொருத்தமாக யாரும் கிடைக்காவிட்டாலும் விந்தியத்திற்குத் தெற்குப் பகுதி யிலுள்ள எந்த நாட்டு வைதிக பிராமண குலத்திலுள்ள் வர்களிலும் பொருத்தமானவரை எடுக்கலாம்." கோதாவரி-என்ற ஊர் உண்டு. தென்னிந்தியத் தொடர்புள்ள நேபால சின்னங்களுள் இதுவும் ஒன்று.”