பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 5 பேராசிரியர் டர்னர் நேப்பாளிச் சொற்கட்கு வேர்ச் சொல் விளக்கம் காட்ட வழங்கும் திராவிடச் சொற்களென பிராகுவி (4), கன்னடம் (27), கோண்டி (5), கூய் (1), குருக்(5), மலையாளம் (1), தமிழ் (16), தெலுங்கு (19), தொது வர் மொழி (2), துளு (1) ஆகிய மொழிச்சொற்களைத் தனித் தனியே பட்டியலிட்டுத் தந்துள்ளார். அப்பட்டியல்களை ஆய்ந்து எந்த நேப்பாளிச் சொல்லிற்கு எந்தெந்தத் - திராவிட மொழிச் சொற்கள் ஒட்பிட்டுக் காட்டப் பட்டுள்ளன என்பது எளிதில் விளங்கும்பொருட்டுப் பின் வரும் பட்டியல் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சொற்கள் பல வடமொழியில் திரிந்து வழங்கும் திற முணர இப்பட்டியல் துணை புரிதல் கூடும். பேராசிரியர் டர்னர் காட்டாத திராவிட ஒப்புச் சொற்களும் இப்பட்டிய லில் காட்டப்பட்டுள்ளன. அவற்றின்மேல் உடுக்குறி இடப்பட்டுள்ளது. தமிழ் தவிரப் பிற திராவிட மொழிச் சொற்களின் ஒலி வடிவைப் பேரளவு சரியாக உணர்த்தும் வகையிலேயே தமிழ் வரிவடிவு தரப்பட்டுள்ளது. ஆயினும், தமிழ் எழுத்துக்களைக்கொண்டே பிற மொழியொலிகளை எல்லாம் குறிக்கும் முறை முன்னும் பிறவாமை மறவாமைக் குரியது. பட்டியல் வருமாறு : - ஒக்லி- உலக்கை (தமிழ்) வாஸ்க் (தொதுவர் மொழி) கர்- கழலை (தமிழ்) கடுவு (தெலுங்கு) கட்டா ( , ) கட்டே ( , ) காலோ- கார் (தமிழ்)" கரா (தெலுங்கு) காடு (கன்னடம்) கோச காஜல்- { * } குட்நு- குட்டு (தமிழ்) கொட்டு ( , ) கொட்டு (தெலுங்கு) குடு (கன்னடம்) குட்டு ( , )