பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4] பெளரனு : புதிய மொழிகளில் அசைவு அல்லது பெயர்ச்சியைச் சுட்டும் சில வினைச்சொற்கள் உள்ளன. நீந்து, மித” என்னும் பொருள் தரும் தைர்னா (இந்தி) என்னும் சொல் லுக்குத் தர், திர் ஆகியன வேர்ச்சொற்களாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், தேல்" (கன்னடம், தெலுங்கு), தார் (பிராகுவி) ஆகிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன.' மார்னு : பாரதம், பாலியில் உள்ள மண்டயதி' என்னும் சொல் லுக்கும் செய்ய என்னும் பொருள் தரும் மாடு'(கன்னடம்), ‘அணிசெய், மெருகிடு' என்னும் பொருள் தரும் மண்' (தமிழ்), அணி செய்' என்னும் பொருள் தரும் மேஜ்" (கூய்), வீடு என்னும் பொருள் தரும் மாடம் (தமிழ்), ‘மாளிகை’ (தெலுங்கு) ஆகிய சொற்கட்கும் பொதுவான தொரு வேர் உண்டு என்றே நான் கருதுகிறேன்.” மிசினு: 'மீனைக் குறிக்கும் பழைய ஆரியச் சொல் மத்ஸ்ய' என்பதே. அமரத்திலும் மனுவிலும் மீன' என்ற சொல் இருக்கிறது. ஆனால், நமக்குத் தெரிந்த வரையில் பாலியில் இல்லை. இது மீன் (தமிழ், கன்னடம், கோண்டி), மீனு (கூய்) ஆகும் முஸ்ல் : - 'இது வரை நாம் பார்த்த வடமொழிச் சொற்களுடன் திராவிட மூலம் காணக்கூடிய எச்சொல்லும் ரிக் வேதத்தைச் சார்ந்ததாய் இல்லை. ஆனால், அதற்கு ஒரு சான்றைத் தானியங்களை மாவாக்கும் கலை நமக்கு வழங்கும் என்று கருதுகிறேன். உலக்கையைச் சுட்டும் அதர்வ மறை - பாலிச் சொல்லாகிய ‘முஸ்லா’வில் உகரத்தை ஸ்கரம் தொடர்வதாலும் லகரம் உண்மை யாலும் பலரறிந்த சொல்லாகும். இச்சொல்லைப் பேராசிரியர் வாக்கார் நகல் அதர்வ மறை" 23, 8. மஷ்மஷாகரம் என்ற சொல்லோடும் ஒப்பிடுகிறார். ஆரியத்தில் நசுக்கு என்னும் பொருள் தரும் மஸ் அல்லது ம்ர்ஷ் என்னும் பழைய வேர்ச்சொல் ஏதும் இல்லை. மாறாகத் தேய், அரை, மெரு