பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வதன் தலைமைக் காரணம் அச்சொற்கட்கு வடவாரிய மொழிகளில் சரியான வேர்ச் சொல் இன்மையும் மாறாகத் திராவிட மொழிகளில் ஏற்ற வேர்ச் சொற்களும் ஒப்புச் சொற்களும் உண்மையுமே ஆகும். 7 மேலுள்ள பட்டியலைக் கண்டோர் கருத்திற்கொள்ளத் தக்க குறிப்புகள் சிலவுள. அவையாவன : 1. பேராசிரியர் டர்னர் மேற்கண்ட நேப்பாளிச் சொற்கள் தமிழ் வேருடையன என்று கருதுவதன் காரணம் பெரும்பகுதி அச்சொற்கள் பற்றிப் பேராசிரியர் யூல் பிளாக் அவர்கள் அந்த நேப்பாளிச் சொற்கட்கு வடவாரிய மொழி களில் தக்க வேர்ச் சொற்கள் இன்மையாலும் மாறாகத் திராவிட ஒப்புச் சொற்கள் உண்மையாலும் அவ்வாறு செய்த முடிவுகளே ஆகும். - 2. நேப்பாளியில் வழங்கும் இத்தமிழ்ச் சொற்கள் வேறு பல வடவாரிய மொழிகளுள்ளும் வழங்குவதையும் இத்தமிழ்ச் சொற்கள் பலவற்றின் திராவிட ஒப்புச் சொற் களையும் பேராசிரியர் டர்னரின் சொற்களஞ்சியம் விளக்கு கிறது. 3. மேற்காட்டிய நேப்பாளியில் வழங்கும் தமிழ் வேருடைய சொற்களின் கூட்டுச் சொற்கள் பல உள. அவை யாவும் மேற்காட்டிய பட்டியலில் இடம் பெற வில்லை. 4. தென்மொழிச் சொற்கள் (இக்கட்டுரையில் காட்டப் பட்டவையும் பிறவும்) வடவாரிய மொழிகளில் திரிந்து வழங்கும் திறம் அடிக்குறிப்புகள் 15, 16-இல் குறிப்பிடப் படும் நூல்களால் விளங்கும். 5. இக்குறி பெற்ற தமிழ் வேர்ச்சொற்கள் பேராசிரி யர் டர்னரால் தமிழ் மூலச் சொற்களாகக் காட்டப்படாதவை. ஆயினும், ஏற்ற தமிழ் வேர்ச்சொற்கள் இவையா யிருக்கலாம். 6. இக்குறி பெற்ற நேப்பாளிச் சொல் திராவிடக் கடன் சொல்லாகப் பேராசிரியர் டர்னரால் காட்டப்பட