பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வில்லை. ஆயினும், அது திராவிடக்கடன் சொல்லாக இருத்தல் கூடும். இது போன்ற இன்னும் கண்டு பிடிக்கப் படாத திராவிடக் கடன் சொற்கள் வேறு பலவும் ஆரிய மொழிகளில் இருத்தல் கூடும். 7. மேற்போக்காகக் காணும்போது வடமொழிச் சொற் களாய்த் தோற்றமளிப்பன பல ஆராயுமிடத்து உண்மை யில் தென்மொழிச் சொற்களாகவே திகழ்கின்றன. 8. நேப்பாளியில் தமிழ்ச்சொற்களைக் காண்பது ஆரிய மொழிகளில் ஆயிரத்துக்குக் குறையாதுள்ள திராவிடச் சொற்களை இனங் கண்டுகொள்ளும் இன்பப் பெருமுயற்சியின் ஒரு சிறு கூறே ஆகும். 9. ஆரிய மொழிகளில் திராவிடக் கடன் சொற்களைக் கண்டு காட்டும் முயற்சியின் வெற்றி ஆரிய திராவிட மொழிப் புலமையோடு கூடிய நடுவு சார்ந்த நன்னெஞ்சங் களைப் பொறுத்தே உள்ளது. 10. உயர்வு தாழ்வு மனநிலையும் விருப்பு வெறுப்பு உளநிலையும் இன்றி ஒரு மொழியில் கலந்துள்ள பிற மொழிச் சொற்களை அறிந்து அறிவிப்பது மனிதகுல ஒருமைப்பாட்டிற்கு உறுதுணை புரியும். & அண்மையில் (1961) வெளி வந்துள்ள திராவிடச்சொற் பிறப்பியற்களஞ்சியம் பேராசிரியர் டர்னர் முயற்சிக்குப்பின் முப்பத்துநான்கு ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள திராவிட மொழி ஆய்வின் (சிறப்பாகப் பேராசிரியர் பர்ரோ ஆரியத் தில் உள்ள பல நூறு திராவிடச் சொற்களை விளக்கியுள்ள மையின்) பயனாக விளங்கும் பெருமை படைத்தது. அந் நூலின் இறுதியில் பிறமொழிகளில் உள்ள திராவிடக் கடன் சொற்கள் மொழிவாரிப்பட்டியல்களில் முறைப்படுத்தப் பெற்றுள்ளது. அவற்றுள் நேப்பாளிச் சொற்களெனத் தரப்பட்டுள்ளவை மட்டும் நூறு. அவற்றை ஆய்வர் நேப்பாளி மொழியில் உள்ள தமிழ்க் கடன்சொற்களின் வகையையும் வளத்தையும் மேலும் விரிவாக அறிந்து இன் புறுவர்.'