பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இருபெரும் பேராசிரியர்கள் டாக்டர் ரா. பி. சே.-டாக்டர் மு. வ. பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் காலம் 1896 முதல் 1961 வரை. பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் காலம் 1912 முதல் 1974 வரை. முன்னவர் 65 ஆண்டுகளும் பின்னவர் 62 ஆண்டுகளும் வாழ்ந்துள்ளார்கள். முன்னவர்க்குப் பின்னவர் பதினாறு (16) ஆண்டு இளையவர். (இனி, இக்கட்டுரையில் பெரிதும் இரு பேராசிரியர்களின் முதல் எழுத்துகள் மட்டுமே குறிப் பிடப்பெறும்; இடச்சுருக்கம் கருதியும் திருப்புரைகளைத் (Repitition) தவிர்த்தல் கருதியும்). மேற்கண்ட தலைப்பு ரா. பி. சே., மு. வ. இருவரையும் தனித்தனியாகவும் ஒப்பு நோக்கியும் நினைத்துப் பார்க்க இடந்தருகிறது. இவ்விரு நோக்குகளையும் நிறைவு செய்ய இக்கட்டுரை இயன்றவரை முயலும். சேதுப்பிள்ளை தமிழகத்தின் தென்கோடி மாவட்டமாகிய திருநெல்வேலியில் பிறந்தவர்; பேராசிரியர் மு. வ. தமிழகத்தின் வடகோடி மாவட்டமாகிய வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தவர். இவ்விருவர் பேச்சிலுமே அவரவர் மாவட்ட மொழிநடை இருந்தது. இவ்வுண்மையை அவர் களோடு நேரில் பழகியவர் நன்கறிவர். திருநெல்வேலியில் பிறந்த ரா. பி. சே. தமிழ்கூறு நல் லுலகம் முழுதும் புகழ்பெற்றிருந்தார்; தமிழகம் முழுவதை யும் அறிவாட்சி செய்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் தனிப்பெருந்தமிழ்ப் பேராசிரியராயும் இலங்கினார்.