பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தமிழகத்தின் வடகோடியில் பிறந்த மு. வ.வும் மேற்கண்ட புகழ் மேவியிருந்தார். ஆயினும், தமிழாசிரியராகவே முப்பத்தைந்தாண்டு காலம் பணியாற்றி மாமதுரையில் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய்' ஆனவகையில் ரா. பி. சேயினும் சிறப்பும் சிந்தனைச் செல் வாக்கும் பெற்றவர் எனலாம். ரா. பி. சே. மு.வ. இருவருக்கும் பொதுவான-போற்றத் தக்க-ஒரு பேரியல்பு உண்டு. அது காலத்துக்கு ஏற்ற கல்விக்கடமை-தமிழ்க் கடமையைச் செய்தமையே; இவ் வுண்மையோடு ஒத்த ஒன்று இரு பேராசிரியர்களும் விடுதலை பெற்ற இந்தியாவில் உரிமை பெற்ற தமிழகம் அமைப்பதில் தமிழரசுக் கழகத்தோடு தயக்கமின்றி ஒத்துழைத்தமையே ஆகும். தமிழரசுக் கழகத்தின் 1. தமிழக எல்லைகள் மீட்பு, 2. தமிழகத்தின் தலைநகரம் சென்னையாகவே அமைதல், 3. தமிழைத் தமிழக ஆட்சி மொழியாக்கல் ஆகிய மூன்றிலும் 1945 முதல் 1961 வரை இரு பேராசிரியர்களும் முழுமையாக ஒத்துழைத்தனர். திராவிட இயக்க எதிர்ப்பில் மட்டும் பேராசிரியர் மு. வ. வுக்குச் சற்று தயக்கம் இருந்தது; தமிழரசுக் கழகத்தோடு சற்றுக் கருத்து வேறுபாடு இருந்தது. ரா. பி. சே.யினும் மு. வ. எழுத்துகளிலேயே வடவர் எதிர்ப்புக் கருத்துகள் உள்ளன. இது பற்றி ஒரு நீதி மன்ற வழக்கும் நடந்தது; ஆனால் இக்கருத்து வேறுபாடு காலப்போக்கில் ம. பொ.சி., மு. வ. இருவரிடமும் கரைந்துவிட்டது. இது குறித்து ம. பொ. சி. யின் எனது போராட்டம் பக்கங்கள் 553-554 பார்க்கத்தக்கது.' ஒரு வகையில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. யை இலக்கிய உலகிற்கு உரியவராக உருவாக்கியவை திரு.வி.க. வின் எழுத்தும் பேச்சும் எனில் அடுத்த நிலையில் பேராசிரியர் ரா. பி. சே. யின் இலக்கியக் கட்டுரைகள் எழுத்தும் பேச்சும் எனலாம். அதற்கு ஒப்பாக, திரு. வி. க. வுக்கு அடுத்த நிலையில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. யின் எழுத்தும் பேச்சும் டாக்டர் மு. வ. வைப் பெரிதும் தமிழர் வாழ்வியல் சிந்தனைகளில் ஊற்றமுறச் செய்தன எனலாம். மு. வ, வின் கண்ணகி'யும் ‘மாதவி”யும் இளங்கோவும் தமிழர் வாழ்வியல் ஒட்டிய பல புதினங்களும், கட்டுரை