பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 தேவை என்று இளமையிலேயே வரதராஜனார் GLÁ னார்; எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முது மையை விஞ்சி நிற்கிறது. - கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும், கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குக் செல்வோம்; தோட்டங் கட்குப் போவோம்; இயற்கையை எண்ணுவோம்; பேசுவோம்; உண்போம். அவர் திருப்பத்துரில் வந்திருந்தபோது இயற்கையோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது. நண்பரது சென்னை வாழ்க்கை இயற்கையிலே செயற்கையைச் சேர்ந்தது. அடிக்கடி நண்பரைச் சென்னையில் காண்பதில் எனக்கு இன்பம் உண்டாகிறது; அதே நேரத்தில் செயற்கையின் சேர்க்கை நினைவு தோன்றும்போது துன்பம் உண்டாகிறது. அன்பரும் சிற்சில போது வருந்துவது எனக்குத் தெரியும். - வரதராஜனார் தமிழறிஞரா? சீர்திருத்தத்தக்காரரா?, அவர் தமிழறிஞர் என்பது வெள்ளிடைமலை, சீர்திருத் தக்காரர் என்பது வெள்ளிட்ட விளக்கு. அவரது சீர்திருத்தப் பேச்சுகளை யான் பல முறை செவிமடுத் துள்ளேன். அவர் வாழ்க்கைச் சீர்திருத்தக்காரர், சமூகச் சீர்திருத்தக்காரர் என்பதில் ஐயமில்லை. அவரை எனது சீர்திருத்த உலகில் என் உள்ளம் சேர்த்தே இருக்கிறது. - - வரதராஜனார் என் வீட்டுக்கு வருவார்; எனக் கினிய கனிகளைக் கொணர்வார். அவர் என்னிடம் பேசிக்கொண்டே எனது அன்றாட வாழ்க்கையை ஆய்ந்துள்ளார். அஃது எனது மணிவிழாவை முன் னிட்டு வள்ளுவர் குறட்பா வெளியிட்ட மலரில் வரதராஜனார் வரைந்துள்ள ஒரு கட்டுரையால் தெரிகிறது. . அறிஞர் இப்பொழுது பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வீற்றிருக்கிறார். அவர் பத்திரிகை யுலகிலும் ஒர் ஆசிரியராதல் வேண்டும் என்பது எனது வேணவா. ஆண்டவன் அருள் செய்வானாக வரத ராஜனாரிடம் தமிழ் பயிலும் மாணாக்கர் சிலர்