பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 என்பது தானே விளங்கும். ஆயினும் ஈண்டு அடிக்குறிப்புப் போல் குறிக்கத்தக்கன சில : - 1. ம. பொ. சியின் எனது போராட்டம் நூலில் பக்கம் 411 இல்: - தமிழரசு இயக்கத்துக்குச் சரியான பின்பலமாக அமைந்த மற்றொரு மாநாட்டையும் நன்றியுணர்வோடு இங்கு நான் குறிப்பிட வேண்டும். அது, சென்னை மாகாணத் தமிழாசிரியர் மாநாடாகும். 1947 மார்ச் 1, 2 தேதிகளில் சென்னை செயிண்ட் மேரிஸ் மண்டபத்தில் அந்த மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை மாநாட்டின் தலைவராக இருந்தார். வரவேற்புக் குழுத் தலைவர் மு. வரதராசனாரும், செயலாளர் பேராசிரியர் அன்பு கணபதியும் என்னையும் அண்ணாவையும் அந்த மாநாட்டில் பேச வைக்க வேண்டுமென்று விரும்பினர். மாநாட்டின் 2ஆவது நாள் நடவடிக்கைகளின் இறுதி நிகழ்ச்சியாக எங்கள் பேச்சு அமைக்கப்பட்டது. (தமிழ்ப்புலவர்கள் கண்ட கனவு அரசியல் நனவாக இருபத்திரண்டாண்டுகள் (22) பிடித்தன.) 2. ம. பொ. சி.யின் 'எனது போராட்டம்' என்ற நூலின் இரண்டாம் பகுதி (பக். 359) தமிழ் முரசு தோற்றம் என்ற தலைப்போடு ஆரம்பமாகிறது. அப்பகுதி வருமாறு: தமிழகக் காங்கிரசுக்குள் நடைபெற்ற கோஷ்டி பூசலில் பங்கு கொண்டிருந்தபோதே புதிய தமிழகம் படைக்கும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு விட்டேனென்று சொல்ல வேண்டும். 26-6-45ல் திருச்சி மலைக் கோட்டை மண்டபத்தில் இலக்கியக் கூட்டமொன்று நடை பெற்றது. ... அந்தக் கூட்டத்திலே புதிய தமிழகம்’ என்னும் பொருள் பற்றி விரிவாகப் பேசினேன். இலக்கியம் பேசுவதாகத் தொடங்கி எனது கற்பனை யிலிருந்து புதிய தமிழகம் பற்றி விரித்துரைத்தேன். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அ ந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மேற்படி கூட்டம் பற்றிய இரு குறிப்புகள் ஏனோ ம.பொ.சி யால் குறிக்கப்படவில்லை. முதலாவது 26-6-45 அவரது