பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பழங்காலப் புலவர் பெருமக்களின் உள்ளக் கருத்துக்கள் ஆராயப்படும், அவை பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் எடுத்துரைக்கப்படும். காந்தியம் போற்றப்படும்; கார்ல்மார்க்ஸ் தத்துவமும் ஆராயப்படும். கருத்துக்களில் எளிமை காணப்படும்; எளிதில் அளவிட முடியாத ஆழமும் காணப்படும். கலைவளம் மல்கி இருக்கும். அது வாழ்வின் தேவைகளுக்கு ஏற்றவையாகவே மாண்புறும்; பழைய பண்பாடும் மதிக்கப்படும்; சீர்திருத்தப் புதுமையும் சிந்திக்கப்படும். அழிவு செய்துவரும் பெரும் வெள்ளம் போல் அலைகள் புரளும்: ஆக்க வேலைக்கு உரிய வகையில் அணைகளும் அமையும்; ஆத்திரம் விஞ்சும்; அறம் விளங்கும். எல்லாம் சேர்ந்த ம. பொ. சி.ஒரு தனிப்போக்கு என்றே சொல்ல வேண் டும். (செங்கோல்; மலர் : 35. இதழ் : 30, 23-6-85, ப. 3). 3. திரு. வி. கல்யாணசுந்தரனார், திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, மூன்றாம் பதிப்பு-1982, பக். 164-65; 660-62. 4. மேற்கண்ட மேற்கோள் பகுதிகளில் இக்கால எழுத்துச் சீர்திருத்தம் மட்டுமே இக்கட்டுரையாளனால் செய்யப்பட்டுள்ளது. கிரத்த எழுத்துகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. குருசாமி என்று குறிக்கப்படும் மாணவரே பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி. - மு. வ. மாணவர்களை நினைக்கும்போது திரு. வி. க. வுக்குப் புதிய தமிழகம் நினைவுக்கு வரல் கருதறகுரியது. திரு. வி. க. தம் வாழ்க்கைக் குறிப்புகளில் சேதுப்பிள்ளையைக் 'கல்வி' என்ற தலைப்பில் குறித்தலும், மு. வ. வைச் சீர்திருத்தம்' என்ற தலைப்பில் குறித்தலும் கருதத்தக்கது. 5. பேராசிரியர் இருவரும் தாகூரின் பேரன்பர்கள். இது சொல்லின் செல்வர் ரா. பி. சே. தம் வீட்டின் முகப்பில் பாரதியார் கவிந்தரராம் ரவீந்திரர்’ என்று போற்றிய தாகூரின் நிறை கோலத்தி லான வண்ணப்படத்தை வைத்துப் போற்றியமையாலும் சிந்தனைச் செல்வராகிய டாக்டர் மு. வ. தாகூர் பற்றிய பள்ளிச்சிறுவர்களும் படித்துப் பயனடைய வல்ல புத்தகம் ஒன்றை எழுதியமையாலும் அறியலாம். பயன்பட்ட நூற்கள் 1. சிவஞானம், ம. பொ, எனது போராட்டம், இன்ப நிலையம், சென்னை-4, 1974, 2. கலியான சுந்தரனார், திரு. வி., வாழ்க்கைக் குறிப்புகள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1. 1982.