பக்கம்:தமிழிலக்கண அகரவரிசை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கண அகரவரிசை

3


இந்தத் தொகுப்புப் பணிக்கு எனக்குப் பெரிதும் பயன்பட்டது மறைமலையடிகள் நூலகமே. அங்குள்ள நூலகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களின் உதவி இங்கே மிக மகிழ்ச்சியோடு குறிப்பிடத் தக்கது. நண்பர் திரு. மாதையன் அவர்கள் இந்தத் தொகுப்புப் பணியில் எனக்கு மகிழ்வோடு உதவி புரிந்திருக்கிறார். இவர்கட்கு என் மனம் நிறைந்த நன்றி.

வளர்ந்துவரும் தமிழிலக்கண மரபுக்கேற்ப இந்த அகர வரிசையில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய அறுவகை இலக்கண நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் ஆங்காங்குச் சில குறைபாடுகள் இருக்கலாமெனினும் இப்பணி இத்துறையில் ஆர்வமுள்ள ஆய்வாளர்கட்கு உதவியாக இருக்கும் என்று மிகவும் நம்புகிறேன்.