பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்

(ஓ) கண் சிவத்தல் Kan civattal.

(22) சினம் - anger

'ஓடரி சிதறிய ஒள்ளரி மழைக்கண்

ஊடெரி உமிழும் ஒளியே போலச்

சிவப்பு உள்ளுறுத்துச் செயிர்ப்பு

முந்துறீஇ' (பெருங். இலா. 16: 16-18)

(ஓ) கண்ணிடனாடல் (ஆண்)

Kannitanital

(23) தீமை, துன்பம் - evil omen

வயிரம் வேய்ந்தமணி நீண்முடி

வாலொளி வானவன் செயிரில்

தீர்ந்த - செழுந்தாமரைக்

கண்ணிடனாடலும் உயிரனானை

நினைந்தானுற்ற தோதியி

னோக்கினான் மயிலனார்க்குப் படி -

வைத்தவன் மால்விசும்பேறினான்'

(சீவக.4: 1156) -

(ஔ) கண் வலனாடல் (ஆண்)

Kan valanatal |

(24) நன்மை - good omen

'நெறியின் நல்கின புள்ளும்

நிமித்தமும்; இறைவன் கண் வலன்

ஆடிற்று இயைந்தரோ' (சீவக.2168:

3-4)

(க) கண்களில் நீர்த்துளி

தோன்றுதல் Kankalil nirttuli tonrutal

(tear in eye)

(25) துன்பம் - Sorrow

போதன புணரரி நெடுங்கண்

புனல்வரப் பூந்துகிற் புடையா

வேதனை பெரிதுடைத் தடிகள்

விளிகவிப் பிறப்பென

உரைத்தாள்' (நீலகேசி.73:3-4)

(ங) திருக்கண் (நெற்றிக்கண்)

Tirukkan

அழிவு

முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட

முதல்வர் மதனன்றன் தென்நீர்

உருவம் அழியத் திருக்கண் சிவந்த

நுதலினார்' (திருஞான தேவா.3461:

1-4)

(ஒப்பு) Eye அறிவாற்றல், அன்பு,

ஆன்ம பலம், உரிமை, உலகம்,

உள்ளுணர்வு, ஒற்றர், சன்னல்,

கண்டிகை


தியானநிலை, - நிலைபேறு, நீதி,

பாதுகாப்பு, புரிந்து கொள்ளும்

திறன், வாழ்வு, விழிப்புணர்வு.

நெற்றிக்கண் - அழிவு. .

நீல நிறக் கண்கள் - அறியாமை,

கருவுற்றிருத்தல், காதல்,

சிற்றின்பத் தோய்வு, வானுலகக்

கடவுளர்.

பச்சை நிறக் கண்கள் - சிறந்த

நம்பிக்கை, நம்பிக்கைக்கு ஒவ்வாத

நிலை, பொறாமை, வளமை.

சிவப்பு நிறக் கண்கள் -

அழுகை, எரிதல், குடிப்பழக்கம்,

நெருப்பு,

ஒரு கண் - ஒளி, சுடும்

இயல்பு, மனித நிலைக்குக்

கீழ்ப்பட்ட தன்மை,

இரு கண்கள் - இரட்டைத்

தன்மை, உடல் மற்றும் ஆன்மா.

மூன்று கண்கள் - கடவுள்

தன்மை, செயலறிவு, படைப்பு.

பல கண்கள் - இரவு, மற்றும்

விண்மீன்கள்.

கண்கட்டு - அடிமைத்தனம்,

அறியாமை, குருடு, நடுநிலைமை.

வலது கண் - சூரியன் மற்றும்

எதிர்காலம்.

இடது கண் - சந்திரன் மற்றும்

இறந்த காலம்,

கண்டல் Kantal (a plant)

(1) பாதுகாப்பு - safety

'கண்டல் வேலி நும் துறை

கிழவோற்கே ' (நற்.54:11)

கண்டிகை Kantikai (an ornament)

(1) அழகு - beauty

'காமர் கண்டிகை தன்னொடு

பின்னிய தூமணித் தோள்வளை

தோளுக்கு அணிந்து' (சிலப்.6: 89-

90)

(ஆ) கண்டிகை ஆரம் Kantikai

aram

(2) துறவு - renunciation

'ஆரம் கண்டிகை ஆடையும்

கந்தையே பாரம் ஈசன் பணி அலது

ஒன்றிலார்' (பெரிய, 144: 1-2) -