பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கயிறு

'பெருங் கயிறு நாலும் இரும் பனம்

பிணையல்' (நற்.90: 6)

(2) அடக்குதல் - control

'வல்லோன் அடங்கு கயிறு

அமைப்ப' (அகம்.224: 2)

(3) காப்பு - safety

'பெருங் கயிற்று ஒழுகை மருங்கில்

காப்ப' (பெரும் 63)

(4) கட்டு - tie

'விசி' வீங்கு இன் இயம் கடுப்பக்

கயிறு பிணித்து' (பெரும்.56)

(5) நேர்நிலை | நுட்பம் - straight,

minute

நூல் அறி புலவர் நுண்ணிதின்

கயிறு இட்டு, தேஎம் கொண்டு,

தெய்வம் நோக்கி, பெரும்பெயர்

மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து'

(நெடு.76-78)

(6) பிணிப்பு - bind

'பருவத்தோடு ஒட்ட ஒழுகல்

திருவினைத் தீராமை ஆர்க்கும்

கயிறு' (குறள்.482)

(7) உணர்வு - emotion

'உறவு கோல்நட்டு உணர்வு

கயிற்றினால் முறுக வாங்கிக்

கடைய முன்நிற்குமே'

(திருநா.தேவா.30: 3-4)

(8) சொல் (வாக்கு) - word / speech

'வாள் தடங்கண்ணி நல்லாள்

வாக்கெனும் தூக்கயிற்றால் பூட்டுபு

கொள்ளப்பட்டான்' (நீலகேசி.265:

3-4)

(ஆ) தாம்பு Tampu

(9) பிணித்தல் - bind

'தீம்பால் கறந்த கலம்மாற்றி,

கன்று எல்லாம் தாம்பின்

பிணித்து ' (கலி.111: 1-2)

(இ) ஞாண் Nan

(10) நுட்பம் - fineness

'நுண்ஞாண் வலையிற் பரதவர்

போத்தந்த பன்மீன் உணங்கல்

கவரும் துறைவனை ' (ஐந்.எழு.64:

1-2)

(ஒப்பு) Rope இணைப்பு, ஏறுதல்,

கட்டுதல், கழிவிரக்கம்; தடை,

நம்பிக்கை இழப்பு.

கரும்பு

கரடி (bear) பார். 'எண்கு '

கரந்தை Karantai (a flower)

(1) வீரம் - bold.

'தறுக ணாளர் நல் இசை நிறுமார்,

.. .. .. .. - செம்பூங் கரந்தை

புனைந்த கண்ணி வரிவண்டு

ஆர்ப்பச் சூட்டி ' (அகம்.269: 5-12)

(2) நிரை கொள்ளல் - a war,

confiscating cattle -

'முருந்தேர் இளநகை காணாய்

நின்னையர் கரந்தை அலறக்

கவர்ந்த இனநிரைகள்' (சிலப். 12:

16)

(3) நறுமணம் - fragrance

'நளிரும் மலர்க் கொன்றையும் நாறு

கரந்தை ' (திருஞான.தேவா. 1687: 1)

கரி (charcoal) பார். 'இருந்தை',

'கந்துள்'


கருடன் (eagle) பார். 'பருந்து'

கருப்பூரம் Karuppuram

(1) நறுமணம் - fragrance

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ

நாறுமோ ' (நாலா.567: 1)

(ஆ) பளிதம் Palitam

நறுமணம் - fragrance

'பளித நாறு மேனியன்'

(சூளா .1371: 4)

கரும்பு Karumpu (sugarcane)

(1) இனிமை - sweet

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக்

கரும்பின்' (குறு.85: 4)

(2) வளமை - prosperity

'பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்

கழனி ஊரன் மார்பு' (ஐங்.4: 4-5)

(3) பயன் - use

'ஆலைக்கு அலமரும், தீம் கழைக்

கரும்பே ' (மலை .119)

(4) கீழ்மை - mean, low

சொல்லப் பயன்படுவர் சான்றோர்

கரும்பு போல் கொல்லப் பயன்படும்

கீழ்' (குறள்.1078)