பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரும்பு

(5) சான்றோர் - the great / learned / of

noble birth

'கடித்துக் கரும்பினைக் கண் தகர

நூறி இடித்து நீர் கொள்ளினும்

இன்சுவைத்தே ஆகும் வடுப்பட

வைதிறந்தக் கண்ணும்

குடிப்பிறந்தார் கூறார்தம் வாயில்

சிதைந்து' (நாலடி.156)

(ஆ) குருத்துக் கரும்பிலிருந்து

- தின்னல் - Kuruttuk karumpiliruntu

tinnal

(6) மேலோர் தொடர்பு - noble

relation.

'கருத்துணர்ந்து கற்றறிந்தார்

கேண்மை எஞ்ஞான்றும் குருத்திற்

கரும்பு தின்றற்றே' (நாலடி.211)


(இ) அடிக்கரும்பிலிருந்து தின்னல்

Atikkarumpiliruntu tinnal

(7) கீழோர் தொடர்பு - mean contact

'.. .. .. .. குருத்திற்கு எதிர்செலத்

தின்றன்ன தகைத்தரோ என்றும்

மதுரமிலாளர் தொடர்பு'

(நாலடி.211)


(ஈ) கரும்பின் சாறு Karumpin caru

(sugarcane juice) |

(8) பயன் - use

'... .. .. .. கரும்பூர்ந்த சாறுபோல்

பின் உதவி மற்றதன் கோதுபோல்

போகும் உடம்பு' (நாலடி.34)


(உ) ஆலைமென் கரும்பு Alaimen

karumpu (crushed sugarcane)

(9) துன்பம் - distress

'ஏலும் இவ் வன்மையை என்

என்று உன்னுதும் ஆலைமென்

கரும்பு அனான் ஒருவற்கு'

(கம்ப.பால,951: 1-2)


(ஊ) - கரும்பு நடுதல் Karumpu -

natutal

(10) மங்கலம்

'காய்க்குலைக் கமுகும் வாழையும்

வஞ்சியும் பூக்கொடி வல்லியும்

கரும்பு நடுமின்' (மணி.1: 46-47)


கல்


கரும்பிருக்க இரும்பு கடித்தல்

Karumpirukka irumpu katittal (bite

iron discarding sugarcane)

(1) அறிவின்மை - foolishness

'அறுத்தானை ஆரூரில் அம்மானை

ஆலாலம் உண்டு கண்டம்

கறுத்தானைக் கருதாதே

கரும்பிருக்க இரும்புகடித்து

எய்த்தவாறே' (திருநா.தேவா. 1227:

5-8)

கருமை (black) பார். 'கறுப்பு'

கருவிளை Karuvilai (a flower)

(1) அழகு, கருமை - beautiful, black

'மணி கண்டன்ன மா நிறக்

கருவிளை ஒண் பூந்

தோன்றியொடு தண் புதல்

அணிய' (நற்.221: 1-2)

(2) ஒளி, அழகு

'பைம்பொழில் வாழ் குயில்காள்

மயில்காள் ஒண் கருவிளைகாள்'

(நாலா.590: 1-2)

கல் Kal (stone)

(1) மறை வலிமை - - concealed

strength |

'களிறு கவுள் அடுத்த எறிகல்

போல ஒளித்த துப்பினை

ஆதலின்' (புறம்.30: 9-10)

(2) நிலைத் தன்மை - stability

'கல் குயின்றன்ன என் நல்கூர்

வளிமறை' (புறம். 196: 12)

(3) கடுமை - harsh

'பகல் நிலை தளர்க்கும் கவணுமிழ்

கடுங்கல் .. .. .. .. உயிர் செகு

மரபின் கூற்றத்து அன்ன

வரும்விசை தவிராது' (மலை.206,

209-210)

(4) தடை, தடுப்பு - obstacle

'வீழ்நாள் படாஅமை

நன்று ஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்'

(குறள்.38)

(5) மிகு வலிமை | கடினத் தன்மை

- strength / hard

'மிக்குடையார் ஆகி மிகமதிக்கப்

பட்டாரை ஒற்கப் படமுயறும்