பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்கனி

பார்ப்பாரும் தின்பர் உடும்பு'

(பழமொழி.35)

(4) பயனின்மை , கீழ்மக்கள் - useless,

ignoble

'அள்ளிக்கொள் அன்ன குறுமுகிழ

ஆயினும் கள்ளிமேல்

கைந்நீட்டார் சூடும்பூ

அன்மையால் செல்வம்

பெரிதுடையர் ஆயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடையார்'

(நாலடி.262)

(5) கடுமை - fierce

'கள்ளி யாரிடைக் கலந்ததோர்

தோற்றமும் கடிதே' (நீலகேசி.30:

4)

களங்கனி Kalaikani (a black fruit)

(1) கருமை - black

'இளம் பிறை அன்ன கோட்ட

கேழல் களங் கனி அன்ன

பெண்பால் புணரும்' (ஐங்.264: 1-2)

(2) புளிச்சுவை - sour taste

'களவுப் புளி அன்ன விளை.. ..'

(புறம்.328: 8)

(3) இனிமை

‘வம்பக் களங்கனிகாள் .. .. ..'

(நாலா.590: 3)

களர் Kalar (saline soil)

(1) வறட்சி - drought

'... .. .. .. கனைகதிர் ஆவி அவ்வரி

நீர்என நசைஇ, மாதவப் பரிக்கும்

மரல்திரங்கு நனந்தலை களர்கால்

யாத்த கண் அகன் பரப்பின்'

(அகம்.327: 8-11)

(2) பயனற்ற நிலை - uselessness

'சிறுவெள் என்பின் நெடுவெண்

களரின், வாய்வன் காக்கை

கூகையொடு கூடிப் பகலும் கூவும்

அகலுள் ஆங்கண்'

(புறம்.362: 16-18)

(3) வாழ்க்கை - life

'அதள் எறிந்தன்ன நெடுவெண்

களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய்

போல ஓடி உய்தலும் கூடுமன்

ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே'

(புறம்.193)

(ஆ) களரி kalari


களிற்றை அரவு விழுங்குதல்


(4) வெம்மை - heat

'வெயில் அவிர்பு நுடங்கும்

வெவ்வெங் களரி' (அகம்.293: 5)


(இ) உவர்நிலம் uvarmilam

(5) பயனின்மை - useless

'தமரல் லவரைத் தலையளித்தக்

கண்ணும் அமராக் குறிப்பவர்க்

காகாதே தோன்றும் சுவர்நிலம்

செய்தமையக் கூட்டியக் கண்ணும்

உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'

(பழ.289)


களவன் Kalavan (crab)

(1) அழிவு, இறப்பு - death,

destruction

'தாய் சாப் பிறக்கும் புள்ளிக்

களவனொடு' (ஐங்.24: 1)

(2) தலைவன் - hero

'புயல் புறம் தந்த புனிற்று வளர்

பைங் காய் வயலைச் செங் கொடி

களவன் அறுக்கும்' (ஐங்.25: 1-2)

(ஆ) அலவன் alavan

(3) தலைவன் - hero|

‘செக்கர் அம் புள்ளித் திகிரி

அலவனொடு, யான் நக்கது, பல்

மாண் நினைந்து' (கலி.146: 23-24)


(இ) ஞெண்டு ientu

(4) தலைவன் - hero

'வேப்புநனை அன்ன நெடுங்கண்

நீர்ஞெண்டு இரைதேர்

வெண்குருகு அஞ்சி, அயலது

ஒலித்த பகன்றை இருஞ்சேற்று

அள்ளல், திதலையின் வரிப்பஓடி,

விரைந்து தன் நீர்மலி

மண் அளைச் செறியும் ஊர'

(அகம்.176: 8-12)

(ஒப்பு) Crab எச்சரிக்கை , கடக

ராசி, செழிப்பான தன்மை,

பின்னடைவியக்கம், மறுபிறப்பு,

முன்னறிதிறம், வலியத்தாக்கும்

தன்மை ; இறப்பு.

களிற்றை அரவு விழுங்குதல் Kalirrai

aravu vilunkutal