பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றாவின் மனம்


கற்பகப்பூங்கா வெட்டலாமோ

கறிக்கு' (தனிப்.420)

(ஆ) நகரில் உள்ள கற்பகச்

சோலைகள் அழிந்து காணப்படுதல்

Nakaril ulla karpakac colaical alintu

kanappatutal (burning groves)

(2) தீமை, அழிவு, இறப்பு - evil

omen

'எரியுமால் கந்தர்ப்ப நகரம்

எங்கணும்' (கம்ப.சுந்.373:2)


கற்றாவின் மனம் Karravin manam

(milch cow's heart)

(1) உருக்கம் - melting

'கற்றாவின் மனம் போலக் கசிந்து

உருக வேண்டுவனே' (திருவா.39:

3.4)

கறங்கு Karaiku (wind-mill, fan,

pinwheel, kite)

(1) சுழற்சி, மாற்றம் - rotate, change

'கண்ணொடு மனம் சுழல் கறங்கு

போல ஆய் மண்ணிடை

விழுந்தனன் வானின் உம்பரான்'

(கம்ப.அயோ .1114: 3-4)

(2) திரிவு / திரிதல் – go round

'கறங்கு ஆகும் எனத் திரிய

நீயோதான் கடவாயே'

(கம்ப ஆரண்.49: 4)

(3) வேகம் / விரைவு - fast, quick

'அறம் கொளாதவர் ஆக்கைகள்

அடுக்கிய அடுக்கல் பிறங்கி

நீண்டன கணிப்பு இல பெருங் கடு

விசையால் கறங்கு போன்றுளது

ஆயினும்' (கம்ப.ஆரண்.515: 1-3)


கறவை (காமதேனு) Karavai (divine

cow)

(1) ஈகை - giving

'ஓவலில் கறவை ஒத்தான்

உலோகமா பாலற் கன்றே'

(சீவக.2572: 4)


கறி Kari (pepper)

(1) வளமை, செல்வம் - prosperous,

wealth


கறுப்பு



'யவனர் தந்த வினைமாண்

நன்கலம் பொன்னொடு வந்து

கறியொடு பெயரும்'

(அகம்.149:9-10)

(ஆ) மிளகு உளு milaku ulu

(2) தீமை, அழிவு - evil,

destruction

'அல்லவையுள் தோன்றி

அலஅலைத்து வாழ்பவர்

நல்லவையுள் புக்கிருந்து,

நாவடங்கக் - கல்வி அளவிறந்து

மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்

மிளகு உளு உண்பான் புகல்'

(பழமொழி.23)


கறுப்பு Karuppu (black)

(1) வெகுளி / சினம் - anger

'கறுப்பும் சிவப்பும்

வெகுளிப்பொருள' (தொல்.855)

(2) பகை - enmity

'அரும்பொருள் வேட்டம் எண்ணி.

கறுத்தோர் சின்புன் கிளவி....'

அகம்.389: 13-14)

(3) வஞ்சகம் - deceit, cunning

'மைபொதி விளக்கே என்ன

மனத்தினுட் கறுப்பு வைத்து'

(பெரிய.473: 5-6)

(ஆ) கருமை karumai

(4) வலிமை - strength

'தோட்பதன் அமைத்த கருங்கை

ஆடவர்' (அகம். 79: 1)

(5)தீமை - evil

'கருந் தொழிலராய கடையாயார்'

(பழமொழி.97: 1)

(6) பாவம், தீமை - sin, evil

'கற்றவைம் பதங்க ணீராக்

கருவினை கழுவப் பட்டு '

(சீவக.951: 1)

(7) அறியாமை - ignorance

'ஈயு மன்னென் றேற்ற கருமையால்

எனும் சிந்தையிலவாய்'

(நீலகேசி.42: 4)

(இ) கார் kar

(8) இருள் – dark