பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காரான்


'மென்கட் கலிவயலூரன் தன்

மெய்ம்மையை எங்கட் குரையா

எழுந்துபோ இங்கட்

குலங்காரமென்று அணுகான்

கூடும் கூர்த்தென்றே அலங்கார

நல்லார்க் கறை'

(திணைமாலை. 127)

காரான் Karan (buffalo)

(1) வளமை, பயன் - prosperous, useful

'மன்ற எருமை மலர் தலைக்

காரான் இன் தீம் பாற்பயம்

கொண்மார்' (நற்.80: 1-2)

(2) தலைவன் - hero |

'இருமருப்பு எருமை ஈன்றணிக்

காரான் உழவன் யாத்த குழவியின்

அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும்

ஊரன்' (ஐங். 181:3-5)

(ஆ) எருமை erumai

தலைவன் - hero

'கழுநீர் மேய்ந்த கருந் தாள்

எருமை பழனத் தாமரைப்

பனிமலர் முனை இ' (நற்.260: 1-2)

(3) கூற்று / இறப்பு - death god / death

'எருமை இருந் தோட்டி எள்ளீ யும்

காளை ' (பரி.8: 86)

செல்வம், வளமை - prosperous,

wealth

'குறுநெறிக் கொண்ட கூந்தல்,

ஆய்மகள் அளைவிலை உணவின்

கிளை உடன் அருத்தி, நெய்விலைக்

கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,

எருமை, நல் ஆன், கருநாகு

பெறூஉம்' (பெரும்.162-165)

(ஒப்பு) Buffalo அமைதியான

வலிமை, அன்புடைமை, இயல்பு

நிலை கடந்த சக்தி, உயர்

குணமுடைமை, சாந்தி; அசுரர்,

இறப்பு, உயிர்ப்பலி, எமன்,

மகிடாசுரன்.

காரி குரலிசைத்தல் Kari kuralicaittal

(1) முன்னறிவித்தல் - prophess, foretell,

omen

'வெட்சி மலர்புனைய வெள்வாள்

உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்

கட்சியுள் காரி கடிய


கால்


குரலிசைத்துக் காட்டும் போலும்'

(சிலப்.12: 13. 3-4)

காரியுண்டிக் கடவுள் Kariyantik katavul

(1) சினம் - anger

வெம்பினான் - காரியுண்டிக்

கடவுளில் கனன்று வேந்தன்'

(சீவக.670: 3)

கால் Kal (air/wind)

(1) இயக்கம் - active

'கழுது கால் கிளர ஊர்

மடிந்தன்றே ' (நற்.255: 1)

(2) விரைவு - speed

‘இளம்பிறை அன்ன விளங்கு

சுடர்நேமி .. .. .. .. கால் இயல்

செலவின் மாலை எய்தி'

(குறு.189:3,5)

(3) வலிமை - strength -

'கன்றிய வெகுளி வேந்தன்

கால்வலி இளையர் காய்ந்து'

(சீவக. 1080: 1)

(ஆ) காற்று karru

விரைவு - speed

'.. .. .. .. காற்றுப் போல் வந்த

கதழ்விடைக் காரியை'

(கலி.103: 40)

(4) கடுமை - harsh ' கடுங்காற்று எடுக்கும்

நெடும்பெருங் குன்றத்து'

(அகம்.258: 6)

(5) பெயர்வு, விரைவு - moving, speed

'கடுகிய விசையொடு காற்றென

உராஅய்' (பெருங். உஞ்.48: 119)

(6) பாவம், தீவினை - sin, bad deeds

'ஒல்கிப்போம் பாவக் காற்றின்

ஒழிக இப்புணர்ச்சி என்றான்'

(சீவக.2728: 4)

(7) அழிவின்மை

'நிலனும் நீரும் மாய் நெருப்பும்

காற்றும் என்று உலைவு இல் பூதம்

நான்கு உடைய ஆற்றலான்'

(கம்ப.கிட் 116: 1-2)

(இ) வளி vali

(8) இன்பம் - pleasure


96