பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காழ்

வெவ்வினை செய்யு மாந்தர்

உயிரெனும் நிலத்து வித்தி'

(சீவக.2762: 1) -

(10) அன்பு

'அருச்சனை வயலுள் அன்பு வித்து

இட்டு' (திருவா.3: 93)

(11) தோற்றம், பிறப்பு

‘வித்தின் வழி வழித் தோன்றும்

முளைகிளை சத்தியின் ஆய

சந்தானத்தை மாற்று என்பன்'

(நீலகேசி.573: 1-2)

(12) பிறப்பு

'மெய்யறிவிலாமை என்னும்

வித்தினுள் பிறந்து' (சூளா.198: 1)

(இ) விதை vitai

(9) வளம் - prosperous

'பல் விதை உழவன் சில் ஏராளர்'

(பதி.76: 11)

(ஈ) முளையாத வித்து mulaiyata

vittu

(10) பயனின்மை - useless

'பூத்தாலும் காயா மரமுள

மூத்தாலும் நன்கறியார் தாமும்

நனியுளர் - பாத்தி விதைத்தாலும்

நாறாத வித்துள பேதைக்கு

உரைத்தாலும் தோன்றா துணர்வு'

பழ.93)

(உ) நன்னிலத்திட்ட வித்து

Nannilattitta vittu

பயன்

'நன்னிலத்திட்ட வித்தின் நயம்வர

விளைந்து செல்வம்' (சீவக.2823:

1)

(ஊ) புன்னிலத்திட்ட வித்து

Punnilattitta vittu

பயனின்மை

'புன்னிலத்திட்ட வித்திற் புற்கென

விளைந்து போகம்' (சீவக.2823:3)

(எ) வெந்த வித்து Venta vittu

பயனின்மை

'வித்தென்றும் வெந்தால்

முளையலதாய் எண்மை '

(நீலகேசி.458: 1)


காளை


(ஒப்பு) - Seed - அறிவாற்றல்,

உள்ளடங்கிய ஆற்றல்,

குழந்தைகள், வளமை, வளர்ச்சி,

விந்து.

காளை Kalai (ox, bull)

(1) ஆண், தலைவன், இளைஞன் -

man, hero, youth

'மை அணற் காளை பொய்

புகலாக' (நற்.179: 8) -

(2) வலிமை - strength

'செரு மிகு மொய்ம்பின் கூர்வேற்

காளையொடு' (நற்.184: 2)

(3) சினம், வெற்றி - angry, victory

'வெஞ்சின விறல் வேற்

காளையொடு' (ஐங்.391: 5)

(4) அச்சமின்மை , வீரம் - fearless,

brave

'கணையோர் அஞ்சாக் கடுங்கண்

காளையொடு' (அகம்.321: 12) -

(5) விரைவு - speed

'துணிந்தோன் மன்ற- துனைவெங்

காளை ' (அகம்.397: 9)

(6) ஆற்றல் - power

'நோக்கினர் செகுக்கும் காளை

ஊக்கி ' (புறம்.302: 8)

(7) உழவு - ploughing

'உழுதுஊர் காளை ஊழ் கோடு

அன்ன ' (புறம்.322: 1)

(ஆ) ஏறு eru

ஆண், தலைவன் - man, hero

'வேனில் ஆனேறு போலச்

சாயினன் என்ப' (குறு.74: 4-5)

(8) தலைமை - chief

'புலம்பயிர் அருந்த அண்ணல்

ஏற்றொடு' (குறு.344: 3)

(9) உழவு, விளைவளம் - , fertility

'ஏறுபொருத செறு உழாது

வித்துநவும்' (பதி.13: 2)

அஞ்சாமை, வீரம் – fearless, brave

'கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா

ஏற்றை ' (கலி.101: 36)

(10) எழுச்சி, அழகு - , beautiful

'இன்சிலை எழில் ஏறு கெண்டி'

(அகம்.265: 12)

வெற்றி - victory

'ஏற்று வலன் உயரிய எரி மருள்

அவிர் சடை' (புறம்.56: 1)


100