பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கான்யாறு


(2) தாழ்மை , இழிவு -

'உருப்பொடியா மன்மதனை

ஒத்துளரே ஆயினும் உன் செருப்பு

அடியின் பொடி ஒவ்வா

மானிடரைச் சீறுதியோ' |

(கம்ப.ஆரண்.321: 1-2)

கான்யாறு Kanyaru (stream)

(1) விரைவு - speed

'கல் அலைத்து இழிதரும் கடு வரற்

கான் யாற்று' (நற்.7:3)

கானல் Kanal (grove)

(1) தண்மை - cool

'சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந் தண் கானலும், நினைந்த

அப் பகலே' (நற்.87: 8-9)

(2) இனிமை - pleasant

மணம் கமழ் நறு வீ வரிக்கும்

துறைவன் தன்னொடு புணர்த்த

இன் அமர் கானல்' (நற்.267: 5-6)

(3) வளமை - fertile |

' .. .. .. மலி புனற் பல் பூங்

கானல் முள் இலைத் தாழை'

(நற்.335: 3-4)

(4) விரிவு

'நிலவு மணல் வியன் கானல்'

(புறம்.17:11)

(ஆ) சோலை colai

(5) தண்மை , நறுமணம் - cool, fragrant

'நறுந் தண் சோலை நாடு கெழு

நெடுந்தகை' (ஐங்.395: 5-6)

(6) வளமை - fertile

கறங்கு இசை அருவி வீழும்,

பிறங்கு இருஞ் சோலை'

(ஐங்.395: 5-6)

(இ) கா ka

(7) தண்மை - cool

'வெயில் ஒளி அறியாத விரிமலர்த்

தண் காவில்' (கலி. 30: 7)

(8) வளமை

'தோகைக் காவின் துளுநாட்டு

அன்ன ' (அகம்.15: 5)

(ஈ) தண்டலை tantalai

(9) தண்மை- cool

கிம்புரி நாவளைக் கொள்தல்



'தாழ் தாழைத் தண் தண்டலை'

(பொரு. 181)

கிடங்கு Kitiku

(1) ஆழம் - depth -

'கடிமிளை, குண்டு கிடங்கின்'

(பதி. 20: 17) |

(2) தண்மை - cool -

'அந்தணர் அருகா, அருங்கடி

வியல்நகர் அம்தண் கிடங்கின்,

அவன் ஆமூர் எய்தின்' (சிறு.187-

188)

(ஆ) அகழி Akali (moat)

ஆழம் - depth

'நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக்

கதூஉம் இன வாளை, நுண் ஆரல்,

பரு வரால், குரூஉக் கெடிற்ற,

குண்டு அகழி'

(புறம்.18: 7-10)

(இ) அகழ் Akal

ஆழம் - depth

'... .. .. .. .. ஐது தோன்று

கமழ்புகை வருமழை மங்குலின்

மறுகுடன் மறைக்கும் குறும்பு அடு

குண்டு அகழ் நீள்மதில் ஊரே'

(புறம்.379: 16-18)

கிண்கிணி Kinkini (tinkling anklet)

(1) மகிழ்ச்சி - gladness

'நகுகம் வாராய் - பாண! - பகுவாய்

அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப'

நற்.250: 1-2)

(2) பொலிவு - bright |

செல்வச் சிறாஅர் சீறடிப்

பொலிந்த தவளை வாய

பொலம்செய் கிண்கிணி' (குறு.148:

1-2)

(3) ஒலி - tinkle

'கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப

பெரிய.28.50)

கிம்புரி நாவளைக் கொள்தல் Kimpuri

navalaik koltal

(1) தீமை, தோல்வி - harm, failure


103