பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டிகை


'நிரைசுடர் - நெடுங்குடை அகடு

நெய்கனி பிரசங்கள் புரைபுரை

விலங்கப் பெய்தவே' (சூளா. 1219:

3-4)

குண்டிகை Kuntikai (கமண்ட லம்)

கமண்டலத்தை உடைத்துப்

பாயையும் கிழித்து ஒரு பெண்

குரு ஓடுதல் Kamantalattai utaittup

payaiyum kilittu oru penkunu otutal

தீமை, துன்பம் - evil omen

'குண்டிகை தகர்த்துப் பாயும்

பீறியோர் குரத்தி ஓட' (பெரிய

28: 638)

குணமாலை Kunamalai

(1) கற்பு - chastity

'வசையற நிறைந்த கற்பின்

மாலையு மாமி தானும்'

(சீவக. 1132: 1)

குப்பைக் கோழித் தனிப்போர் Kuppaik

kolit tanippor

(1) துன்பம்

'குப்பைக் கோழித் தனிப்போர்

போல, களைவோர் இலை - யான்

உற்ற நோயே' (குறு.305:6-7)

குமரியாடல் Kumariyatal (bath in

capecomorin)

(1) மூப்பு ஒழிதல் - curb ageing

'சிந்தை நலிகின்ற திருநீர்க்

குமரியாட அந்தி அதன் ஆய

பயன் என்னை மொழிக என்றாள்

முந்தி நலிகின்ற முது

மூப்பொழியும் என்றான்'

(சீவக.2020: 2-4)

{{u|குயில்}} Kuyil (cucoo)

(1) தலைவி, பெண்

'சோலை மென் குயில் அனாள்

சுற்றி வீக்கிய' (கம்ப பால.951:3)

(2) கருமை

'கண்ணுற என் கடல் வண்ணனைக்

கூவு கருங்குயிலே' (நாலா.555:3-4)

குயிலோசை Kuyilocai (cooing)

குரங்கு


(1) மகிழ்ச்சி

'மாநனை கொழுதி, மகிழ்குயில்

ஆலும்' (நற்.9: 10) -

(2) வேனிற்காலம் - spring

'யாற்று அறல் நுணங்கிய நாட் பத

வேனில், இணர் துடை மா அத்த

புணர் குயில் விளித்தொறும்'

(நற்.157: 4-5)

(3) தனிமை | துன்பம் - lonely /

distress -

'அரும்பு அவிழ் பூஞ்

சினைதோறும் இருங்குயில்

ஆனாது அகவும் பொழுதினான்'

(கலி.92: 63-64)

(4) நடுநிலை - just, impartiality,

neutrality

'மா நனை கொழுதிய மணி நிற

இருங் குயில் படு நா விளி

யானடு நின்று, அல்கலும் உரைப்ப

போல, ஊழ் கொள்பு கூவ'

(அகம்.25: 6-8) -

குரங்கு Kuraiku (monkey | ape)

(1) கீழ்மை - low

'நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்

பரந்தொருவர் நாடுங்கால்

பண்புடையார் தோன்றார்

மரம்பயில் சோலை மலைநாட!

என்றும் குரங்கினுள் நன்முகத்த

இல்' (பழமொழி.103: 4)

(2) அற்பர் - mean

'உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த

பெருமை அடக்கமில் உள்ளத்த

நாகி - நடக்கையின் ஒள்ளியன்

அல்லான்மேல் வைத்தல்,

குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து

விடல்' (பழமொழி.255)

(3) அழகின்மை - ugly

'கோலமில் குரங்கு ஆட்டிக்

கொல்வார்களை' (நீலகேசி.222: 2)

(ஆ) கடுவன் Katuvan

(4) தலைவன்

'. .. .. .. .. .. கடுவன், முறி ஆர்

பெருங் கிளை அறிதல் அஞ்சி, கறி

வளர் அடுக்கத்து, களவினில்

புணர்ந்த செம் முக மந்தி

செய்குறி' (நற்.151: 5-8)

(5) தலைமை - headship, leader

















106