பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குரவு

'குரங்கின் தலைவன் குரு மயிர்க்

கடுவன்' (ஐங்.275: 1)

(இ) கலை Kalai

தலைவன்

'கரு விரல் மந்திச் செம்முகப்

பெருங் கிளை பெரு வரை

அடுக்கத்து அருவி ஆடி, ஓங்கு

கழை ஊசல் தூங்கி, வேங்கை

வெற்பு அணி நறு வீ கற்சுனை

உறைப்ப, கலையொடு திளைக்கும்

வரையக நாடன்' (நற்.334: 1-5)

(ஈ) மந்தி Manti

(6) தலைவி


'... ... ... ... கடுவன், முறி ஆர் பெருங்

கிளை அறிதல் அஞ்சி, கறி வளர்

அடுக்கத்து, களவினில் புணர்ந்த

செம் முக மந்தி செய்குறி'

(நற்.151: 5-6)

(7) மக்கள் - children

'மகாஅர் அன்ன மந்தி' (சிறுபா.56)

(8) திரிதல், அலைதல்

'மந்திபோல் திரிந்து

ஆரியத்தொடு'

(திருஞான. தேவா.2786: 5)

(உ) கைப்பழம் இழந்த மந்தி

Kaippalam ilanta manti)

(9) அரசை இழந்த கட்டியங்காரன்

'கைப்பழம் இழந்த மந்தி

கட்டியங்காரன் ஒத்தது இப்பழம்

துரந்து கொண்ட சிலதனும்

என்னை ஒத்தான்' (சீவக.2726: 1-2)

(ஒப்பு) Monkey, Ape உருவ

வழிபாடு, உறுதியின்மை , கழிகாமம்,

தன்னம்பிக்கை வாய்ந்த

மனப்போக்கு, நிலையற்ற

மனநிலை, நிலையாமை, பழமை,

மாறும் இயல்பு, விரைவியக்கம்;

குறுகிய மனப்பான்மை, கெடு

நோக்கம், தற்பெருமை,. பாசாங்கு,

பேராசை, போலிப்புகழ்ச்சி,

மிகச்சிறிய திருட்டு; ஆடுதல்,

குரவு Kuravu

(1) பின்பனிக்காலம்

குருக்கத்தி

'பின்பனி அமையம் வரும் என,

முன்பனிக் கொழுந்து முந்துறீஇக்

குரவு அரும்பினவே' (நற்.224:2-3)

(ஆ) குரவம் Kuravam

(2) நறுமணம்

'குரவம் நாறும் குழலுமை கூறராய்'

(திருநா, தேவா.632:3)

குரீஇ Kurii

(1) தலைவன் | அன்பு

'உள் இறைக் குரீஇக் கார் அணற்

சேவல்' (நற்.181: 1)

(2) அறிவு

முதுக் குறைக் குரீஇ முயன்று

செய் குடம்பை ' (நற்.366: 9)

(ஆ) குருவி ஒப்புதல் Kuruvi

opputal

(3) தீமை கடிதல்

'உளைக் குரல் சிறு தினை

கவர்தலின், கிளை அமல் பெரு

வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி'

அகம்.388: 4-5)

(ஒப்பு) Sparrow அன்பு, இழிநிலை,

இனப்பெருக்க வளம், கழிகாமம்,

கிறித்து, தனிமை, துணிவு, பணிவு,

போர்த்தினவு, விழிப்பு நிலை;

இழிநிலை, சிற்றின்ப சார்பு,

தாழ்நிலை, தீமை, வாயலப்பல்;

தூய்மைப்படுத்துதல்.

குருக்கத்தி Kurukkatti (a creeper

flower)

(1) தூய்மை

'துய்த் தலை இதழ பைங்

குருக்கத்தியொடு' பித்திகை விரவு

மலர் கொள்ளீரோ? என வண்டு

சூழ் வட்டியள் திரிதரும்'

(நற்.97:6-8)

(ஆ) குருகு தளிர்த்தல் Kuruku

(2) கார்காலம்

'மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்

மாலிருள் நெய்யால் தளிர்க்கும்

நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத்


107