பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குருதி

'அமர்க்கண் அமைந்த அவிர்

நிணப் பரப்பின் குழூஉச் சிறை

எருவை குருதி ஆர' (பதி.67: 8-9)

(5) அச்சம் - fear

'வெருவரு குருதியொடு மயங்கி,

உருவு கரந்து' (புறம்.271: 5)

(6) இறப்பு - death

'சேறுபடு குருதிச் செம்மல்

உக்கு ஓஒ! மாறு செறு நெடு வேல்

மார்பு உளம் போக நிணம் பொதி

கழலொடு நிலம் சேர்ந்தனனே'

(புறம்.285: 10-12)

(7) வீரம், வலிமை, வெற்றி - valour,

victory

'அடல்வலி எயினர் நினடி தொடு

கடனிது மிடறுகு குருதிகொள்

விறறரு விலையே' (சிலப்.12: 18)

(ஆ) உதிரம் Utiram

(7) தியாகம் - sacrifice

'வெறிகமழ் வெற்பனென்

மெய்ந்நீர்மை கொண்ட தறியாண்

மற்றன்னோ ; அணங்கு

அணங்கிற்றென்று மறியீர்த்து

உதிரந்தூய் வேலற்றரீஇ

வெறியோடு அலம்வரும் யாய்'

(ஐந்.ஐம்.20)

(இ) உதிர மாரி பெய்தல் Utira

mari peytal

(8) தீமை, அழிவு, இறப்பு - evil,

destruction, death

'அதிர மா நிலத்து அடி பதைத்து

அரற்றிய அரக்கி கதிர் கொள் கால

வேல் கரன் முதல் நிருதர்

வெங்கதப்போர் எதிர் இலாதவர்

இறுதியின் நிமித்தம் ஆய்

எழுந்து ஆண்டு உதிர மாரி பெய்

கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள்'

(கம்ப.ஆரண்.313)

(9) தீமை, தோல்வி - evil, failure

'உதிரநீர்ப் புதுமழை சொரிந்தது'

(சூளா . 1220:3)

(ஒப்பு) Blood அரசுரிமை,

ஆன்மா, இணை உடன்படிக்கை,

இதயம், குடும்ப உறவுகள்,

சூரியன், தடை விலக்கு, தியாகம்,

நீர், பிறப்பு, வளமை, வாழ்வு;

இறப்பு, தண்டனைக்குள்ளாகத்


குழல்

தக்க நிலை, பில்லி சூனியம்,

போர், வெறி உணர்ச்சி.

குருந்தம் Kuruntam (a fragrant plant)

(1) தண்மை , நறுமணம்

'கண்ண கல் ஞாலம் அளந்ததூஉம்

காமருசீர்த் தண்ணறும்

பூங்குருந்தம் சாய்த்ததூஉம்' (திரி.1:

1-2)

(ஆ) குருந்து Kuruntu

(2) முல்லைத்திணை

'கொன்றையும் குருந்தும் குலைக்

கோடலும்' (சூளா. 18: 1)

குருமணி Kurumani (மாணிக்கம்)

(1) ஒளி

'குருமணிகள் வெயில் எறிக்கும்

குற்றாலம் சென்றடைந்தார்'

(பெரிய 3858: 7-8)

குலிகம் Kulikam (சாதிலிங்கம்)

(1) சிவப்பு நிறம்

'ஏரிருங் குலிகப்

புனல்பரந்திழிதரும் காரிருங்

குன்றில் கவின்பெறத் தோன்ற

(பெருங். உஞ்.44: 83-84)

(2) வனப்பு, அழகு

'மணியரும்பு மலர் அங்கை குலிகம்

ஆர் வனப்பினவே' (சீவக. 170: 4)

குழல் Kulal (flute)

(1) இனிமை

'பல் ஆ தந்த கல்லாக் கோவலர்

கொன்றை அம் தீம் குழல் மன்று

தோறு இயம்ப' (நற்.364: 9-10)

(2) நன்மை

'அணி மாலைக் கேவற் தரூஉமார்.

ஆயர் மணி மாலை ஊதுங் குழல்'

(கலி.101:34-35)

(3) துன்பம்

'பனி இருள் சூழ்தர - பைதல் அம்

சிறு குழல்' (கலி.129: 16)

(ஆ) ஆம்பலங் குழல் Ampalai

kulal

(4) அழுகை, துன்பம்


109