பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடம்

கூடம் (சுத்தியல்) Kitam (hammer)

(1) ஆற்றல் - strong

'இரும்புபயன் படுக்கும் கருங்கைக்

கொல்லன் விசைத்து எறி

கூடமொடு பொரூஉம் உலைக் கல்

அன்ன, வல்லாளன்னே'

(புறம்.170: 15-17)

(2) வலிமை - strength

'கருங் கைக் கொல்லன் இரும்பு

விசைத்து எறிந்த கூடத் திண்

இசை வெரீஇ' (பெரும்.437-438)

(ஒப்பு) Hammer ஆற்றல்,

உழைப்பு, கருமான், நிலைபேறு,

படைப்பு, மீட்பு, வளமை, விதி,

வலிமை, பொதுவுடைச் சின்னம்;

அழிவு, பழிதீர்வு.

கூடல் Kital (a city)

(1) சிறப்பு, உயர்வு, மேன்மை

'பணிவு இல் உயர் சிறப்பின்

பஞ்சவன் கூடல்' (பரி.தி.2: 46)

(2) அழகு

'உருகெழு கூடலவரோடு, வையை'

(பரி.தி.2: 91)

(3) தமிழ்

'தமிழ்கெழு கூடல் தண்கோல்

வேந்தே ' (புறம்.58: 13)

(4) புகழ்

'மாடம் பிறங்கிய மலிபுகழ்க்

கூடல்' (மது.429)

(ஆ) மதுரை

புகழ் - fame

'தண் தமிழ் வேலித்

தமிழ்நாட்டகம் எல்லாம் நின்று

நிலை இப் புகழ் பூத்தல் அல்லது,

குன்றுதல் உண்டோ மதுரை'

(பரி.தி.9:1-3)

(5) செல்வம் - wealth

'கார்த்திகை காதில் கன மகர

குண்டலம் போல், சீர்த்து

விளங்கித் திருப்பூத்தல் அல்லது.

கோத்தை உண்டாகுமோ மதுரை'

(பரி.தி.11: 1-3)

(6) வளமை - prosperous

'வண்ணம் நீவிய வணங்கு இறைப்

பணைத்தோள், ஒள் நுதல்,

விறலியர் பூவிலை பெறுக! என.


கூந்தல்


மாட மதுரையும் தருகுவன்'

(புறம்.32:3-5).

(7) தமிழ் | மகிழ்ச்சி | இன்பம் -

tamil / happiness / joy

'தமிழ் நிலை பெற்ற, தாங்கு அரு

மரபின் மகிழ்நனை, மறுகின்

மதுரையும் வறிதே' (சிறு.66-67)

கூத்தன் Kittan (actor)

(1) உயிர் - life / soul

தோற்பையுள் நின்று தொழிலறச்

செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்

கால்' (நாலடி.26)

கூதளம் Kutalam (a plant)

(1) கூதிர்காலம், நறுமணம் - winter,

fragrance

'கூதிர்க் கூதளத்து அலரி நாறும்'

(நற்.244: 2)

(2) குளிர்ச்சி - cool

'வெண் கூதாளத்துத் தண்பூங்

கோதையர்' (பட்,85)

கூந்தல் Kintal (tresses / hair)

(1) இன்பம் - pleasure

'அரிசில் அம் தண் அறல் அன்ன,

இவள் விரி ஒலி கூந்தல் விட்டு

அமைகலனே ' (நற்.141: 11-12)

(2) புணர்வு

'செய்வினை முடித்த செம்மல்

உள்ளமொடு இவளின் மேவினம்

ஆகி, குவளைக் குறுந்தாள்

நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல்

மெல் அணையேமே' (குறு.270: 5-8)

(3) வளமை

'புதல் மிசை நறு மலர் கவின்

பெறத் தொடரி, நின் நலம்மிகு

கூந்தல் தகை கொளப் புனைய

வாராது அமையலோ இலரே!'

(ஐங்.463: 1-3)

(4) அழகு

'ஆய் நுதல், அணி கூந்தல்,

அம்பணைத் தடமென்தோள்'

(கலி.40: 8)

(5) அன்பு | இன்பம்

'கோல் திரள் முன் கைக் குறுந்

தொடி மகளிர் நாறு இருங் கூந்தல்

கிழவரைப் படர்ந்தே '

(புறம். 113: 8-9)


113