பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூவல்


(2) ஈரம் | இரக்கம் - sympathy / pity

'அகல் இடம் குழித்த அகல் வாய்க்

கூவல் ஆறு செல் வம்பலர் அசை

விட ஊறும்' (அகம்.295: 11-12)

(ஆ) கேணி Kéni

(3) ஈகை | பயன் – benevolence / use

வறன் பொருந்து குன்றத்து உச்சிக்

கவாஅன் வேட்டச் சீறூர் அகன்

கண் கேணிப் பய நிரைக்கு எடுத்த

மணி நீர்ப் பத்தர்' (நற்.92: 4-6)

(4) தண்மை - coolness

'தண் கேணித் தகை முற்றத்து'

(பட்.51)

(5) அறிவு - knowledge / wisdom

'தொட்டனைத்து ஊறும்

மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு'

(குறள்.396)

(6) பயன், உதவி

'உறைப்பரும் காலத்தும் ஊற்றுநீர்க்

கேணி இறைத்துணினும்

ஊராற்றும் என்பர்' (நாலடி.184: 1-

2)

(இ) கிணறு Kinaru

(6) ஆழம் - depth

'.. .. .. .. நெடுங் கிணற்று வல்

ஊற்று உவரி தோண்டி'

(பெரும்.97-98)

ஈகை - benevolence

'இரப்பவர்க் கீய குறைபடுமென்

றெண்ணிக் கரப்பவர் கண்டறியர்

கொல்லோ - பரப்பிற்

றுறைத்தோணி நின்றுலாம்

தூங்குநீர்ச் சேர்ப்ப

இறைத்தோறும் ஊறுங் கிணறு'

(பழமொழி.378)

பயன்

'மல்கு திரைய கடற்கோட்

டிருப்பினும் வல்லூற்று உவரில்

கிணற்றின்கண் சென்றுண்பர்

செல்வம் பெரிது உடையர்

ஆயினும் சேட்சென்றும் நல்குவார்

கட்டே நசை' (நாலடி.263)

(ஈ) ஊருணி Unni

(7) பயன் - utility


கூற்றம்


'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு

அவாம் பேர் அறிவாளன் திரு'

(குறள்.215)

(ஒப்பு) Well ஆசி, ஆழ்ந்த

அறிவு, ஆழம், ஆன்மா ,

இரசியம், உண்மை , கடவுள்

இயல்பு, எல்லையற்ற கருணை,

கருப்பை, சிந்தனை, நற்பேறு,

நிறைவு, நீதி, நோக்கீடுபாடு,

பிறப்பு, புனிதத்தன்மை, பொறுப்பு,

மறுபிறப்பு, வளமை, வாழ்வின்

மூலம்; இறப்பு, கீழுலகம்,

தேங்கிய நிலை; தூய்மைப்

படுத்துதல்.

கூவிளம் Kivilam (a flower)

(1) நறுமணம், தூய்மை , சிவன் -

fragrance, pure, Siva

'வெறிவிரவு கூவிள நல்

தொங்கலானை' (திருநா தேவா.61:

1)

கூளி Kuli (evil spirit)

(1) கடுமை - cruel

'கூறாமல் குறித்ததன்மேல்

செல்லும் கடுங்கூளி'

(கலி.கட வா.3)

(2) அச்சம் - fear

'பெருவிழாக் கழிந்த, பேஎம் முதிர்

மன்றத்து, .. .. .. .. கணம் கொள்

கூளியொடு கதுப்பு இகுத்து

அசைஇ' (பட்.255,259)

கூழ்மரம் Kulmaram (pulp tree)

(1) அன்பு மிகுதி - boundless love

'எல்லையொன்று இன்றியே

இன்னாசெய் தாரையும் ஒல்லை

வெகுளார் உலகாள் தும் என்பவர்

சொல்லின் வளாஅய்த்தம்

தாள் நிழல் கொள்பவே

கொல்லையுள் கூழ்மரமே போன்று'

(பழமொழி.256)

கூற்றம் Kurram (death god)

(1) மாறாமை - unchanging

'மாற்றருங் கூற்றம் சாற்றிய

பெருமையும்' (தொல், 1025)


115