பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடி

சொல்லவா வாலி துரோபதையை

மூக்கரிந்தது அல்லவா மாபாரதம்'

(தனிப், 120)

(ஓ) மகரக்கொடி Makarakkoti

(17) வெற்றி, இன்பம்

'மகர வெல்கொடி மைந்தன்

திரிதர' (சிலப்.4: 83)

(18) மன்மதன்

'புன்னைப் பொதும்பர் மகரத்திண்

கொடியோன் எய்த புதுப்புண்கள்'

(சிலப். 7: 37)

(ஓ) மீனேற்றுக் கொடி

Minerukkoti

காமன்

'மீனேறுயர்த்த கொடிவேந்தனை

வென்ற பொற்பில்' (சீவக.பதி.6:

1)

(ஔ) மீன் கொடி Min koti

மன்மதன்

'மீன் வரு கொடியவன் விறல்

அடும் மறவோன்'

(கம்ப.ஆரண்.110:3)

(க) விடை சேர் கொடி vitai ver

koti

(19) சிவபெருமான்

'உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு

ஒரு தோழம் தேவர் விண்ணில்

பொலிய அமுதம் அளித்த

விடைசேர் கொடி அண்ணல்'

(திருஞான தேவா. 18: 1-4)

(ங) ஏறுடை வெல்கொடி Erutai

velkoti

சிவபெருமான்

'ஏறுடை வெல்கொடி எந்தை மேய

இராமேச்சுரம்'

(திருஞான தேவா.2974:3)

(ச) வீணைக்கொடி Vinaikkoti

(20) இராவணன்

'கடிப்பக் கடிது உற்றவன்

காண்தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர்

வானவர் ஆசி கொண்டான்'

(கம்ப ஆரண்.907: 3-4)


கொடி


(ஞ) வெண்கொடி Venkoti

(21) அமைதி | சாந்தம், மகிழ்ச்சி

'விண்ணியல் மாடம் விளங்கு

ஒளிவீதி வெண்கொடி எங்கும்

விரிந்து இலங்க' (திருஞான.

தேவா.225: 1-2)

(22) தூய்மை , தூய மனம்

'சோதி வெண் கொடிகள் ஆடும்

சுடர் நெடு மறுகிற் போகி'

(பெரிய.5.8)

(ட) இராவணனின் வீணைக்

கொடி மேல் கழுகும் காகமும்

மொய்த்தல் Iravananin vinaikkoti mel

kalukum kakamum moyttal (birds of

prey on flags)

(23) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'எழுது வீணை கொடு ஏந்து

பதாகை மேல் கழுகும் காகமும்

மொய்த்தன' (கம்ப.யுத்த,3664: 1-2)

(ண) கரனின் கொடிமேல்

காக்கைக் கூட்டங்கள், போரிட்டுக்

கீழே விழுந்து புலம்பிக்

கொண்டு புரளுதல் Karanin

kotimel kakkaik kuttankal, porittuk

kile viluntu pulampik kontu puralutal

(crows crowding on flag)

(24) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'கருதி வீர நின் கொடிமிசைக்

காக்கையின் கணங்கள் பொருது

வீழ்வன புலம்புவ நிலம் படப்

புரள்வ' (கம்ப ஆரண்.429:3-4)

(ஒப்பு) Flag அடையாளம்,

ஆற்றல், சுய துணிவுரை,

நாட்டுப்பற்று, போரின் நிலை,

வெற்றி.

கொடி மெதுவாக கீழிறக்கப்

படுதலும், வேகமாக மேலேற்றப்

படுதலும் - வணக்கம்

செலுத்துதல்,

பாதியில் ஏற்றப்பட்ட கொடி -

இழவு நிகழ்ச்சி,

தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி -

பேரிழப்பு, அவல நிலை.


120