பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொவ்வை


'பெருந் தண் கொல்லிச் சிறு பசுங்

குளவி' (நற்.346:9)

(5) அச்சம்

பெரும்பூண் பொறையன்

பேஎமுதிர் கொல்லி' (குறு.89: 4)

(6) வளமை

'சுரும்பு ஆர் சோலைப் பெரும்

பெயற் கொல்லி' (பதி.81: 24)

(7) மேன்மை / சிறப்பு - excellence

வெல் போர் வானவன் கொல்லி

மீமிசை ' (அகம்.33: 14)

(8) விரிவு - wide -

'.. ... ... ... ... பறையன் கார்புகன்று

எடுத்த சூர்புகல் நனந்தலை

மா இருங் கொல்லி உச்சித் தா அய்'

(அகம்.303: 4-6)

கொவ்வை Kovvai (a fruit)

(1) சிவப்பு நிறம்

'... .. .. .. நசையவர்க்குக் கூடுவ

தீவானைக் கொவ்வைபோல்

செவ்வாயாய்' (ஏலாதி.34: 2-3)

(ஆ) கனி Kani

சிவப்பு நிறம்

'கனிதரு செவ்வாய் உமையொடு

காளிக்கு' (திருவா.2: 142)

கொள்ளி மாலை Kolli malai

(1) கடுமை - cruel

- 'கொள்ளி மாலையும் கொடிபடு

கூறையும் அகலும் .. .. .. கள்ளி

யாரிடைக் கலந்ததோர் தோற்றமும்

கடிதே' (நீலகேசி.30: 2,4)

கொற்கை Korkai (a town / port)

(1) வளமை - prosperity

'முத்துப் படு பரப்பின் கொற்கை

முன் துறை' (நற்.23: 6)

(2) சிறப்பு, புகழ் - excellence,

famous

'புகழ் மலி சிறப்பின் கொற்கை

முன்துறை' (அகம்.201: 4)

கொற்றவை Korravai (a goddess)

(1) வீரம் - valour


கொன்றை

‘மறம் கடைக்கூட்டிய துடிநிலை

சிறந்த கொற்றவை நிலையும்

அத்திணைப்புறனே' (தொல்.1005)

(2) வலிமை - strong -

'நெற்றி விழியா நிறை திலகம்

இட்டாளே, கொற்றவை கோலம்

கொண்டு, ஓர் பெண்' (பரி.11: 99-

100)

(3) வெற்றி - victory

'வெற்றி வெல்போர்க் கொற்றவைச்

சிறுவ!' (திருமுரு.258)

(ஆ) சூலி Culi

வெற்றி - victory

'விடர்முகை அடுக்கத்து

விறல்கெழு சூலிக்கு' (குறு.218: 1)

(இ) அயிரை Ayirai

(4) வலிமை, ஆற்றல்

அயிரை பரைஇ, ஆற்றல் சால்

முன்போடு' (பதி.3ம் பத்து,

பதிகம் 8)

(5) அச்சம்

'குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக்

குன்றோடு உருகெழு மரபின்

அயிரை பரை இ' (பதி.38: 11-12)

(ஈ) கான் அமர் செல்வி Kin

amar celvi

(6) புகழ்

'.. .. .. .. ஓங்குபுகழ்க் கான் அமர்

செல்வி அருளலின்'

(அகம்.345: 3-4)

கொன்றை Konrai (a flowering tree)

(1) கார்காலம் - rainy season

'மறந்து கடல் முகந்த கமஞ் சூல்

மா மழை பொறுத்தல் செல்லாது

இறுத்த வண் பெயல் கார் என்று

அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல

பிடவமும், கொன்றையும்,

கோடலும் - மடவ ஆகலின்,

மலர்ந்த ன பலவே ' (நற்.99: 6-10)

(2) அழகு, வளமை

பொன் தொடர்ந்தன்ன தகைய நன்

மலர்க் கொன்றை ஒள் இணர்

கோடுதொறும் தூங்க' (நற்.221:3-4)

(3) உயர்வு | சிறப்பு


122