பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடையின் கதிர்

கோடையின் கதிர் Kotaiyin katir

(summer sun)

(1) கொடுமை - cruel

'கோடையின் கதிர் எனக் கொடிய

கூர்ங்கணை ' (கம்ப.யுத்.1520: 2)

கோதாவரி Kotavari (a river)

(1) புனிதம் - holy

'புத்தீர்த்திட்டு அலையாமல்

புலவர் நாடு உதவுவது புனிதமான

அத்தீர்த்தம் அகன் கோதாவரி

என்பர்' (கம்ப.கிட்,758: 5-7)

கோது Kotu -

(1) வீண் - futile, waste

... .. .. .. கரும்பூர்ந்த சாறுபோல்

சாலவும் பின் உதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு'

(நாலடி.34)

கோப்பெருந்தேவி Kopperuntevi

(queen)

(1) கற்பு - chastity

'தன்னெறி வழாஅத் தருசக குமரன்

தற்பயந்தெடுத்த கற்பமை காரிகைக்

கோப்பெருந் தேவிக்கு

யாப்புடைத்தாக' (பெருங். மகத.22:

42-44)

கோல் Kol (scepter)

(1) அரசு, அரசாட்சி - reign, rule

'சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன'

(நற்.265: 6)

(2) நடுநிலைமை - neutral, just

'நடுவு இகந்து ஒரீஇ நயன்

இல்லான் வினை வாங்க, கொடிது

ஓர்த்த மன்னவன் கோல் போல'

(கலி.8: 1-2)

(3) முறைமை - order, regularity

'உறை வரை நிறுத்த கோல், உயிர்

திறம் பெயர்ப்பான் முறை செய்தி

என நின்னை மொழிவது'

(கலி.100.15-16)

(4) தண்மை | பாதுகாத்தல் /

புரத்தல்

'தமிழ் கெழு கூடல் தண் கோல்

வேந்தே ' (புறம்.58: 13)


கோவர்த்தனம்


(5) நிழல் | பாதுகாப்பு | ஆதரவு -

support -

'ஏரோர்க்கு நிழன்ற கோலினை

எனவும்' (சிறுபாண்.233)

(6) செங்கோன்மை - just rule, royal

power

'வான் நோக்கி வாழும் உலகு

எல்லாம் :- மன்னவன் கோல்

நோக்கி வாழும் குடி' (குறள்.542)

(7) வெற்றி

'வேல் அன்று, வென்றி தருவது;

மன்னவன் கோல்; அதூஉம்

கோடாது எனின்' (குறள்.546)

(ஆ) செங்கோல் Cenkol

(8) அறம் - righteousness

'அல்லது கடிந்த அறம் புரி

செங்கோல்' (பெரும்.36)

(9) காவல் / பாதுகாப்பு

'குடி புறங்காத்து ஓம்பும்

செங்கோலான் வியன்தானை'

(கலி.130: 18)

(ஒப்பு) Sceptre அமைதி, அரச

ஆற்றல், ஆட்சியாளர், உயர்

பதவி, உரிமை, உலக ஆற்றல்,

ஒளி, தூய்மை , நன்மை , நீதி,

நேர்மை, படைப்பாற்றல்,

பொறுப்பு, மகிழ்ச்சி, வளமை.

கோவண ஆடை Kovana Atai (loin

cloth)

(1) எளிமை, மானம் காத்தல் -

simple, dignity, have self-respect

'உடைதனில் நால்விரல் கோவண

ஆடை உண்பதும் ஊரிடு பிச்சை

வெள்ளை ' (திருஞான. தேவா.216:

5-6)

கோவர்த்தனம் Kovarttanam

(1) பாதுகாப்பு

'வட்டத் தடங்கண் மட மான்

கன்றினை வலைவாய்ப் பற்றிக்

கொண்டு குறமகளிர் கொட்டைத்

தலைப் பால் கொடுத்து வளர்க்கும்

கோவர்த்தனம் என்னும் கொற்றக்

குடையே' (நாலா.264: 5-8)


124