பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோழி


கோழி Koli (fowl, hen)

(1) தாழ்வு, இழிசெயல் - low, mean

action -

'கப்பி கடவதாக் காலைத்தன்

வாய்ப்பெறினும் குப்பை

கிளைப்போவாக் கோழிபோல்

மிக்க கனம்பொதிந்த

நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும்'

(நாலடி.341)

(2) செயலின்மை - inactive

'தலக்கமே செய்து வாழ்ந்து

தக்கவாறு ஒன்றும் இன்றி

விலக்குவார் - இலாமையாலே

விளக்கத்திற் கோழி போன்றேன்'

(திருநா.தேவா.1510: 1-4)

கோள் நிலை திரிதல் Kol nilai tirital

(change in the course of planet)

(1) வறட்சி, வளனின்மை - drought

'கோள் நிலை திரிந்து கோடை

நீடினும்' (மணி.பதி.24)



சக்கரவாளக் கோட்டம்

cakkaravalakkottam (a hall)

(1) துயர் துடைத்தல் - remove misery

'துக்கம் துடைக்கும் துகளறு

மாதவர் சக்கர வாளக் கோட்டம்

உண்டாங்கு' (மணி.17: 75-76)

சகடம் Cakatam (a star)

(1) திருமணம், நன்மை - wedding,

good omen

'அம்கண் இருவிசும்பு விளங்க,

திங்கட் சகடம் மண்டிய துகள்தீர்

கூட்டத்து, கடிநகர் புனைந்து,

கடவுட் பேணி, படுமண

முழவொடு பரூஉப்பணை இமிழ,

வதுவை மண்ணிய மகளிர்

விதுப்புற்று' (அகம்.136: 4-8)

(ஆ) கோள் Kol

(2) புகழ், மேன்மை - fame, excellence

'கோள் கால் நீங்கிய கொடு வெண்

திங்கள் கேடு இல் விழுப் புகழ்

நாள் தலைவந்தென' (அகம்.86: 6-7)


சங்கம்


(இ) உரோகிணி Urokini

(3) இணைவு, பிரிவின்மை - join,

inseperate

'முரண் மிகு சிறப்பின்

செல்வனொடு நிலை இய,

உரோகிணி நினைவனள் நோக்கி'

(நெடுநல். 162-163)

(ஈ) மதியம் சகடணைதல்

Matuyam cakanaital

நன்மை , திருமணம்

'வானூர் மதியம் சகடணைய

வானத்துச் சாலி ஒருமீன்

தகையாளைக் கோவலன் மாமுது

பார்ப்பான் மறைவழி காட்டிட'

(சிலப். 1: 50-52)

சங்கம் Caikam (conch)

(1) ஒலி - sound

'புள்வாய் முரசமொடு பொறிமயிர்

வாரணத்து முள்வாய்ச் சங்க

முறைமுறை ஆர்ப்ப' (சிலப்.4: 77-

78)

(2) வெண்மை - whiteness

'பகையணங்கு ஆழியும் பால்வெண்

சங்கமும்' (சிலப். 11: 47)

(ஆ) சங்கு Caiku

(3) மேன்மை , வெண்மை - excellence

'சுரும்பிவர் சந்தும் தொடுகடன்

முத்தும் வெண் சங்குமெங்கும்

விரும்பினர் பாற்சென்று

மெய்க்கணியாம் வியன் கங்கை

என்னும்' (திருக்கோ . 16: 248. 1-2)

(4) வாய்மை , உயர்குடியினர்,

நற்பண்பு, நிலையான தன்மை -

truth, of high birth, stable

'சங்கினும் பாலினும் சலமில்

வாய்மை விழுத்திணைப் பிறந்த

ஒழுக்குடை மரபினர்'

(பெருங். இலா.5: 65-66)

(இ) வளை (சங்கம்) ஒலித்தல்

Valai olittal

(5) நன்மை

'ஏரணங்கு இளம்பெருந் தேவி

நாளுறச் சீர் அணங்கு அவிர்

ஒளித் திவிட்டன் தோன்றினான்


125