பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சடை

நீர் அணங்கு ஒளிவளை நிரந்து

விம்மின' (சூளா, 72: 1-3)

(ஈ) வரி சங்கம் நின்று ஊதுதல்

Vari cankam ninru ututal

(6) திருமணம்

'மத்தளம் கொட்ட வரி சங்கம்

நின்று ஊத .. .. .. கனாக்

கண்டேன்' (நாலா,561)

சடை Catai (matted hair)

(1) துறவு (வேடம்) - penance, feign

'சடையினர் உடையினர் சாம்பல்

பூச்சினர்' (சிலப்.26; 225)

சமண குருமார்களின் கையிலிருந்து

மயிற்பீலி, தடுக்கு, பாய்

ஆகியன நழுவி வீழ்தல்

Camana kurumarkalin kaiyiliruntu

mayirpili, tatukku, pay akiyana

naluvi viltal

(1) தீமை, அழிவு - harm, destruction

'பீலியும் தடுக்கும் பாயும்

பிடித்தகை வழுவி வீழ .. .. ..

மேல்வரும் அழிவுக்காக வேறு

காரணமும் காணார்' (பெரிய.2536:

1-6)

சரவணம் Caravanam (a pond)

(1) புனிதம், சிறப்பு, கடவுட்டன்மை -

holy, divine

'விண்ணோர் ஏத்தும் வியத்தகு

மரபில் புண்ணிய சரவணம்

பவகாரணியோடு இட்ட சித்தி

எனும் பெயர் போகி' (சிலப். 11:

93-95)

சலாகை (நன்மணி) Calakai

(1) சிறப்பு

'சேயிருங் குன்றம் ஈன்ற

செழுமணீச் சலாகை போல்வாள்'

(சூளா ,984: 4)

சனி Cani (Saturn)

(1) துன்பம் - suffering

'சனியான தமிழை விட்டுத்

தையலார்தம் இடமிருந்து


சாறு கொள் ஊர்


தூதுசென்று பிழைத்தோமில்லை'

(தனிப்.493: 6-7)

(2) கொடுமை - cruel

'வியந்த நிசாசரனாம் என்று

சந்திரனும் வெஞ்சனிக்குப்

பயந்தவனாம் என்றூ பானுவும்

வந்து பணிய' (தனிப்.646: 1-2)

சாகாடு Cakatu (cart)

(1) வாழ்க்கை | பயணம் - life /

journey -

'கள் கொண்டு மறுகும் சாகாடு

அளற்று உறின்' (அகம்.116: 3)

(2) உலகம் ஆளும் முறை,

ஆட்சித்திறம், இயக்கம் - reign,

ruling, movement

'கால் பர் கோத்து, ஞாலத்து

இயக்கும் காவற்சாகா

டுகைப்போன் மாணின், ஊறு

இன்றாகி ஆறு இனிது படுமே;

உய்த்தல் தேற்றான் ஆயின்,

வைகலும், பகைக் கூழ் அள்ளற்

பட்டு, மிகப் பல் தீ நோய்

தலைத்தலைத் தருமே' (புறம்.185)

(3) உடம்பு - body

'பண்டம் அறியார் படுசாந்தும்

கோதையும் கண்டு பாராட்டுவார்

கண்டிலர்கொல் மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு

பேர்த்திட்டுக் குத்தும்

முடைச்சாகாடு அச்சிற்று உழி'

(நாலடி.48)

சாம்பற்பூச்சு Camparpuccu

(1) துறவு (வேடம்) - disguise

'சடையினர் உடையினர் சாம்பல்

பூச்சினர்' (சிலப்.26: 225)

சாரிகை (நாகணவாய்ப்பறவை) Carikai

(1) மென்மை

'தண்ணென் சோலை எம்மருங்கும்

சாரும் மடமென் சாரிகையின்' -

(பெரிய. 1024: 5-6)

சாறு கொள் ஊர் Caru kol ur (festive

town)

(1) பொலிவு, மகிழ்ச்சி - bright,

gladness


126