பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடர்

'ஞாயிறு அனையன் - தோழி !

நெருஞ்சி அனையஎன்

பெரும்பணைத் தோளே' (குறு.315:

3-4)

(9) வெளிப்படை | மறைப்பின்மை -

clear, open / unconcealed

'.. .. .. .. .. அலரே மறைத்தல்

ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல்

ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே?'

(ஐங்,71: 3-5)

(10) நடுநிலை - just, neutral

"குடதிசை மாய்ந்து, குணமுதல்

தோன்றி, பாய் இருள் அகற்றும்,

பயம் கெழு பண்பின், ஞாயிறு

கோடா நன் பகல் அமயத்து'

(பதி.22: 32-34)

(11) தெறுதல் - burn

'தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு

ஞாயிற்று ' (பதி,52: 29)

(12) உயர்வு, நீண்ட வாழ்வு -

eminence, long life

மாகம் சுடர மா விசும்பு உகக்கும்

ஞாயிறு போல விளங்குதி, பல்

நாள்!' (பதி.88: 37-38)

ஒளி, வெம்மை - light, heat

'நின் வெம்மையும் விளக்கமும்

ஞாயிற்று உள' (பரி.4: 25)

(13) குற்றமின்மை - blemishless

'மாசு இல் ஆயிரம் கதிர்

ஞாயிறும்' (பரி.3: 22)

அழகு | எழில் - beauty

'ஞாயிற்று ஏர் நிறத் தகை!' (பரி.5:

12)

(14) முருகன்

'வெண் சுடர் வேல் வேள்! விரை

மயில் மேல் ஞாயிறு!' (பரி.18: 26)

சினம் - anger

'.. .. .. .. ஞாயிறு கடுகுபு கதிர்

மூட்டிக் காய் சினம் தெறுதலின்'

(கலி.8: 2-3)

(15) பழியின்மை - blameless

‘பழி தபு ஞாயிறே! பாடு

அறியாதார்கள் கழியக் கதழ்வை

எனக் கேட்டு' (கலி.143: 22-23)

(16) இயக்கம் / செயல் திறம் - active

'தொல் இயல் ஞாலத்துத்

தொழில் ஆற்றி, ஞாயிறு,

வல்லவன் கூறிய வினை தலை

வத்தான் போல், கல்' அடைபு,

கதிர் ஊன்றி, கண்பயம்

கெடப்பெயர' (கலி. 148: 1-3)

சுடர்


(17) வளம் - wealth

'பயம் கெழு திருவின் பல்கதிர்

ஞாயிறு' (அகம்.298: 1)

(18) திறல், ஆண்மை - strength,

manliness -

'ஞாயிற்று அன்ன வெந் திறல்

ஆண்மையும்' (புறம்.55: 13)

(19) நிலைபேறு - stable

'ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெரும! நீ

நிலமிசையானே!' (புறம்.6: 28-29)

(20) புகழ் - fame

'ஒண் ஞாயிறு அன்னோன் புகழ்

மாயலவே' (புறம்.231: 6)

(21) இறைமை - divine

'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல்கண்

டாஅங்கு' (திருமுரு.1-2)

(22) சிறப்பு - eminence

'விரி கதிர் ஞாயிறு விசும்பு

இவர்ந்தன்ன சேண் விளங்கு

சிறப்பின், செம்பியர் மருகன்'

(புறம்.228: 8-9)

(23) காலம் - time

'தோற்றம்சால் ஞாயிறு நாழியா

கூற்றம் அளந்துநும்

நாளுண்ணும்' (நாலடி.7: 1-2)

(ஈ) ஞாயிறு படுதல் Nayiru patutal

(sun set)

(24) துன்பம், இறப்பு - sorrow, death

'கடுங் கதிர் ஞாயிறு மலை

மறைந்தன்றே; அடும்பு கொடி

துமிய ஆழி போழ்ந்து, அவர்

நெடுந் தேர் இன் ஒலி இரவும்

தோன்றா; இறப்ப எவ்வம் நலியும்,

நின் நிலை ' (நற்.338: 1-4)

(உ) ஞாயிற்றில் நிலவு Nayirril

nilavu

(25) செயற்கருமை - impossible

செஞ் ஞாயிற்று நிலவு

வேண்டினும்' (புறம்.38:7)

(ஊ) எல்லை Ellai

(26) பொலிவு - dazzling

... .. .. .. வானமும் நம்மே

போலும் மம்மர்த்து ஆகி, எல்லை

கழியப் புல்லென்றன்றே' (குறு.310:

2-4)


131