பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுநந்தை

சுடு நாராசம் செவி செறித்தாங்கு

வடிவேல் தானை வத்தவன்

தன்னொடு' (பெருங். உஞ்.47: 235-

239)

சுநந்தை (குணமாலையின்vமாமி)

Cunantai

(1) கற்பு

'வசையற நிறைந்த கற்பின்

மாலையு மாமி தானும்'

(சீவக.1132: 1)

சுரமை Curamai (a town)

(1) வளம், செல்வம்

'விஞ்சை நீள் உலகுடன் விழாக்

கொண்டன்னது துஞ்சுநீள்

நிதியது சுரமை என்பவே'

(சூளா .7:3-4)

சுழி Culi (whirl)

(1) ஆபத்து - danger

வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரை

நின்றார்' (கலி.140: 25)

(2) துன்பம், அவலம் - suffering,

affliction

அவல மறு சுழி மறுகலின்'

(புறம். 238: 19)

சுறா Cura (shark)

(1) வலிமை, கொடுமை - strong, cruel

- ... ... ... ... செங் கோல் கொடு முடி

அவ் வலை பரியப் போகிய கோட்

சுறாக் குறித்த முன்பொடு' (நற்.215:

10-12)

(2) கடுமை - fierce

'கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட்

தந்தை ' (நற்.392: 1)

(3) சினம்

'இன மீன் இகல்மாற வென்ற

சினமீன் எறிசுறா வான் மருப்புக்

கோத்து நெறிசெய்த' (கலி.131: 6-7)

(4) விரைவு - quick

'... ... ... .. கடுஞ் செலல் வாட் சுறா

வழங்கும் வளை மேய் பெருந்

துறை ' (அகம்.150: 6-7)

(ஆ) சுறா ஏறு எழுதிய

மோதிரம் Cura eru elitiya motiram

(5) காமம் - love, passion


சூரியகாந்தம்


அவற்றுள் நறா இதழ் கண்டன்ன

செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு

எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்' (கலி.84: 22-24)

(இ) சுறவம் செறி கொடி

Curavam cerl koti

(6) மன்மதன்

'சுறவம் செறி வண் கொடியோன்

உடலம் பொடியா விழி செய்தான்'

(திருஞான தேவா. 12: 3-4)

(ஈ) சுறவு Curavu

(7) காமம்

'சுழிசென்று மாதர்த் திரைபொரக்

காமச் சுறவு எறிய அழிகின்றனன்'

(திருவா.24: 4)

(ஒப்பு) Shark வலிமை; ஆபத்து,

இறப்பு, தீமை

சூது Citu (gambling)

(1) துன்பம்

'கட்டு இலா மூதூர் உறை இன்னா

ஆங்கின்னா நட்ட கவற்றினால்

' (இன்னா .25:3-4)

சூர் (சூரபன்மன்) Cur

(1) கடுமை | தீமை

'கடுஞ்சூர் மாமுதல் தடிந்து' (பரி.9:

70)

சூர்ப்ப நகை Cirppanakai

(1) கொடுமை - cruel, inhuman

'சண்டாளி சூர்ப்பநகை

தாடகையைப் போல் வடிவு

கொண்டாளைப் பெண்டு என்று

கொண்டாயே' (தனிப். 15: 1-2)

சூரியகாந்தம் Curiyakantam (a gem)

(1) ஒளி | வெம்மை

‘சூரியற் காண்டலும் சூரிய காந்தம்

அஃது ஆரழல் எங்ஙனம்

கான்றிடும் அங்ஙனம்' (சீவக.2208:

1-2)


135