பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகர்

நடுவுநிலைமை

'வாலிழைப் பணைத்தோள் வாசவ

தத்தைக்கும் பாசிழை அல்குல்

பதுமா பதிக்கும் சீர்நிறை கோல்

போல் தான் நடுவாகி'

(பெருங் வத்.5: 42-44)

(ஊ) துலை Tulai

நடுநிலைமை

'சீலம் அல்லன நீக்கிச் செம்

பொன் துலைத் தாலம் அன்ன

நிலை தாங்கிய

(கம்ப. அயோ . 112: 1-2)

(ஒப்பு) Balance துலாம் இராசி,

நீதி; இறப்பு, பஞ்சம், வறட்சி,

தகர் Takar (ram, goat)

(1) வலிமை

'வார் கோட்டு வயத் தகர் வாராது

மாறினும்' (ஐங். 238:1)

(2) அழகு, மென்மை

'திருந்துகோன் ஞமன்தன் மெய்யிற்

பிரிவித்து இருங்கண் வெள்யாட்டு

எழின்மறி கொடுத்தோன்' (பரி.

5:61-62)

(ஆ) கிடா அய் Kitaay

(3) பலி - sacrifice

"நிலைக்கோட்டு வெள்ளை

நால்செவிக் கிடா அய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட

ஓச்சி' (அகம். 156:14-15)

(இ) துரூஉ turiu

(4) தியாகம் - selflessness

'நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து

தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி

கொடுக்கும்' (அகம். 35:8-9)

(உ) விடை vitai)

(5) வலிமை

"மதவலி நிலை இய மாத்தாட்

கொழுவிடை' (திருமுரு, 232)


தகர்

(ஊ) மை விடை வீழ்த்தல் Mai

vitai vilttal

(6) பலி | வளமை

‘மட்டு வாய் திறப்பவும் மை விடை

வீழ்ப்பவும் அட்டு ஆன்று ஆனாக்

காழுந்துவை ஊன் சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம்

பழுனி' (புறம், 113:1-3)

(எ) மறிகள் விளையாடாதிருத்தல்

Marikal vilaiyatatiruttal

(7) தீமை

'மறி தெறித்தாடா வருவதொன்று

உண்டு ' (சிலப். 17:3.2)

(ஏ) மறி Mari

(10) அறிவின்மை

'அன்றக் கோட்டத்துள் அறிவிலா

மறிதலை அறுப்பான்'

(நீலகேசி.34: 1)

(ஐ) மறியறுத்தல் Mariaruttal

(11) தெய்வத்தை மகிழ்வித்தல்

'வுண்டதாயிற் றோர்குழவி

யென்னவுவப் பித்தற்குக்

கொண்டுவந்தே மறியறுக்க

வென்றார் கொலையாளர்'

(நீலகேசி.36: 3-4)

(ஓ) மேழகம் Melakam

(12) விரைவு

'விரைசெலல் வெம்பரி மேழகம்

குரைகழன் மைந்தனைக்

கொண்டு பறந்தான்' (சீவக.521: 3-

4)

(ஒப்பு) Goat, Sheep அன்பு,

அறியாமை, எளிமை, உதவியற்ற

நிலை, கபடமற்ற தன்மை ,

சுதந்திரம், திக்கற்ற நிலை, நன்

மனப்பாங்கு, நேர்த்தி, நுட்பமாகக்

கேட்கும் திறன், பிடிவாதம்,

மென்பண்பு, முன்னறிவிப்பு,

வளமை, விரைவீக்கம், வீரியம்,

வேனிற்காலம், அறிவு மழுக்கம்,

ஒழுக்கக் கேடு, கழிகாமம்,

நேர்மையற்ற தன்மை, பழியார்வம்,

மிக்க அருவருப்பு, கறுப்பு ஆடு

  • அழிவு, தீமை, துரதிர்ஷ்டம்.


142