பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாமரை இலை நீர்


புதுப்பித்தல், புனிதம், மறுமலர்ச்சி,

மறுபிறப்பு, முதன்மை , வளமை,

விடியல், விரிவடைதல், வெற்றி.

ஐந்து இதழ் தாமரை - இறப்பு,

ஓய்வு, திருமணம், துவக்கம்,

பிறப்பு.

எட்டு இதழ் தாமரை - பிரமனின்

இருப்பிடம்.

ஆயிரம் இதழ் தாமரை -

ஆன்மீக வெளிப்பாட்டின் முழுமை.

நீலத்தாமரை - தெய்வீக

வாழ்க்கை .

சிவப்புத்தாமரை - இருக்கை.

தாமரை இலை நீர் Tamarai ilai nir

(1) மன நடுக்கம் - tremble

'அளற்றெழு தாமரை அள்ளிலை

நீரில் துளக்குறு நெஞ்சின்

நடுக்கமொடு விம்மி'

(பெருங். உஞ்.42: 119-120)

தாமரை நகாத பொய்கை Tamarai

nakata poykai

(1) மகப்பேறின்மை

'புக்கிளம் தாமரை நகாத

பொய்கையும் .. .. .. மக்களை

இலாததோர் மனையும் ஒக்குமே'

(சூளா .413)

தாய் இல் முட்டை Tay il muttai

(1) பாதுகாப்பின்மை , அழிவு - unsafe,

ruin

'தாய் இல் முட்டை போல,

உட்கிடந்து' (குறு. 152: 2)

தாய் முலை Tay mulai (breast)

(1) பயன் - useful

'சரயு என்பது தாய்முலை அன்னது

இவ் உரவு நீள் நிலத்து ஓங்கும்

உயிர்க்கு எலாம்' (கம்ப.பால.24: 3-

4)

தாரணி Tarani

(1) கற்பு

'படைப்பருங் கற்பினாள் தான்

பாவையைப் பரிவு நீக்கி'

(சீவக.555: 1)


தாள் பற்றி அம்மி மிதித்தல்


தாழ் Tal (bolt, latch)

(1) காவல், காப்பு

‘தாழ்செறி கடுங்காப்பின் தாய்

முன்னர்' (கலி. 48:10)

(2) தடை - obstruction

'அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்' (குறள். 71)

(3) தடை / இடையூறு - obstacle

'தெரியா தவர்தம் திறனில்சொல்

கேட்டால் பரியாதார் போல இருக்க

- பரிவு இல்லா வம்பலர் வாயை

அவிப்பான் புகுவரே அம்பலம்

தாழ்க்கூட்டு வார்' (பழமொழி.55)

தாழம் பூ Talam pu

(1) நறுமணம்

'தாழம் பூ மணம் நாறிய

தாழ்பொழில்' (திருநா. தேவா.727:

3)

தாழை Talai)

(1) அழகு

'அரவு வாள் வாய முள் இலைத்

தாழை பொன் நேர் தாதின்

புன்னையொடு கமழும்' (நற்.235:2-

3)

(2) நறுமணம்

'கமழும் தாழைக் கானல் அம்

பெருந்துறை' (பதி. 55: 5)

(3) தலைவி

'கொடுமுள் மடல் தாழைக்

கூம்பவிழ்ந்த ஒண்பூ விடையுள்

இழுதொப்பத் தோன்றி'

(ஐந்.ஐம்.49: 1-2)

(3)நெய்தல் திணை

'கோடுடைந்தன தாழையும்

கோழிருள்' (சூளா.20: 1)

தாள் பற்றி அம்மி மிதித்தல் Tal parri

ammi mitittal

(1) திருமணம் - wedding

'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

பற்று ஆவான், நம்மை

உடையவன், நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால்

தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக்

கண்டேன்' (நாலா.563)


148