பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திங்கள்


"நல்லை அல்லை - நெடுவெண்

நிலவே!' (குறு, 47:4)

(உ) நிலா Nila

ஒளி

மணி நிற மை இருள் அகல, நிலா

விரிபு’ (பதி. 31:11)

(15) அழகு

'அம் கண் வானத்து அணி நிலாத்

திகழ்தரும் (பரி. 1:44)

வெண்மை

'வாள் நிலா ஏய்க்கும் வயங்குஒளி

எக்கர் மேல்' (கலி, 131:17)

வெண்மை

‘விட்ட வெறுங் கூட்டையினிச்

சுட்டதனால் என்னபயன்

வெண்ணிலாவே' (தனிப்.700: 7-8)

(ஊ) மதி Matil

(16) ஈரம் - sympathy

- - - - - - மதி பல் உள்ளமொடு

மறைந்தவை ஆடி' (நற். 122:8)

(17) தூய்மை - pure

மதி மயக்குறுஉம் நுதலும்' (குறு.

226:3)

(18) அறிவு

'புது வழிப் படுத்த மதியுடை

வலவோய்!' (குறு, 400:5)

(19) தொன்மை - ancient

'தொல் முறை இயற்கையின்

மதியோ ' (பரி, 2:1)

அழகு

'விண் அளி கொண்ட வியன் மதி

அணி கொள' (பரி, 13:5)

தூய்மை, வெண்மை

'சுடர் மதிக் கதிரெனத் தூ

நரையோரும்' (பரி.தி. 1:43)

(20) நிலையாமை - changing

  • நீள் கதிர் அவிர் மதி நிறைவு

போல் நிலையாது' (கலி, 17:7)

(21) முழுமை - fullness, totality

மை தீர்ந்தன்று, மதியும் அன்று'

(கலி. 55:10)

ஒளி

‘ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி

போல, நீருள்ளும் தோன்றுதி,

ஞாயிறே !' (கலி, 147:30-31)

(23) மாசின்மை


திங்கள்


மதி இருப்பன்ன மாசு அறு சுடர்

நுதல்' (அகம். 192:1)

(23) தொன்மை

  • தொல் நிலக் கிழமை சுட்டின், நல்

மதி' (புறம். 32:7)

(24) சேய்மை

சேண் விளங்கு இயற்கை வாள்

மதி கவைஇ' (திருமுரு. 87)

(25) தலைமை

‘பல் மீன் நடுவண் பால் மதி

போல, இன் நகை ஆயமொடு

இருந்தோர் குறுகி' (சிறுபா, 219-

220)

அறிவு

‘ஆயிரவ ரானும் அறிவிலார்

தொக்கக்கால் மாயிரு ஞாலத்து

மாண்(பு) ஒருவன் போல்கலார்

பாய்இருள் நீக்கும் மதியம்போல்

பல்மீனும் காய்கலா ஆகும் நிலா'

(பழமொழி. 27)

(26) உயர்வு, அறிவுடையோர்

நெறியால் உணராது நீர்மையும்

இன்றி சிறியார் எளியரால் என்று -

பெரியாரைத் தங்கணேர் வைத்துத்

தகவல்ல கூறுதல் திங்களை

நாய்குரைத் தற்று' (பழமொழி. 107)

(27) பழி, களங்கம்

'விதிப்பட்ட நூலுணர்ந்து

வேற்றுமை யில்லார் கதிப்பவர்

நூலினைக் கையிகந்தா ராகிப்

பதிப்பட வாழ்வார் பழியாய

செய்தல் மதிப்புறுத்துப் பட்ட மறு'

(பழமொழி, 10)

குளிர்ச்சி

'கதிர்சுடும் அமயத்துப் பனிமதி

முகத்தோன்' (மணி.5: 60)

அரசன் (தயரதன்)

'ஆன மா மணி மண்டபம்

அன்னதில் தானை மன்னன்

தமரொடும் சார்ந்தனன் மீன்

எலாம் தம் பின் வர வெண்மதி

வான் நிலா உற வந்தது மானவே'

(கம்ப.பால.1054)

(எ) வானூர் மதியம் Vanur

matiyam

(28) கீழ்மக்கள், தாழ்வு, தேய்வு -

low born, lowly, decline

'.. .. .. .. வரிசையால் வானூர்

மதியம்போல் வைகலும் தேயுமே


150