பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திமில்

(12) துணை, உதவி, பாதுகாப்பு -

Support, help, protection

'நெடுநீர் புணையின்றி நீந்துதல்

இன்னா' (இன்னா .3)

(13) கல்வியறிவு - knowledge

'மூப்பின்கண் நன்மைக்கு

அகன்றானும் கற்புடையாள்

பூப்பின்கண் சாராத் தலைமகனும்

- வாய்ப்பகையுள் சொல்வென்றி

வேண்டும் இலிங்கியும் இம்மூவர்

கல்விப் புணை கைவிட்டார்'

(திரி.17)

(ஈ) அம்பி Ampi

(14) அசைவு - move, oscillate

'பனைவெளிறு அருந்து பைங்கண்

யானை ஒண்சுடர் முதிரா

இளங்கதிர் அமையத்து,

கண்படுபாயல் கைஒடுங்கு

அசைநிலை வாள்வாய்ச் சுறவின்

பனித்துறை நீந்தி, நாள்வேட்டு

எழுந்த நயன் இல் பரதவர்

வைகுகடல் அம்பியின்

தோன்றும்' (அகம்.187: 18-23)

அறம் - moral, virtuous

'உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு

உய்க்கும் அறத்துறை அம்பியின்

மான' (புறம்.381: 23-24)

(உ) வெற்று யாற்று அம்பி Verru

yarru ampi

(15) பொலிவின்மை - gloomy

'அந்தோ! எந்தை அடையாப் பேர்

இல் வண்டு படு நறவின் தண்டா

மண்டையொடு வரையாப் பெருஞ்

சோற்று முரி வாய் முற்றம்,

வெற்று யாற்று அம்பியின் எற்று?

அற்று ஆகக் கண்டனென், மன்ற'

(புறம்.261:1-5)

(ஊ) கலம் Kalam

(16) பயணம் - voyage/ journey

'யவனர் தந்த வினைமாண்

நன்கலம் பொன்னொடு வந்து

கறியொடு பெயரும்' -

(அகம், 149:9-10)

(எ) ஆழ்கலம் Alkalam (sinking

ship)


திமில்


(17) துன்பம் - suffering

'நட்பு நார் அற்றன நல்லாரும்

அஃகினார் அற்புத் தளையும்

அவிழ்ந்தன - உட்காணாய்

வாழ்தலின் ஊதியம்

என்னுண்டாம்? வந்ததே

ஆழ்கலத்து அன்ன கலி'

(நாலடி.12)

(ஏ) ஆழ்கல மாந்தர் Alkala

mantar (people in sinking ship)

துன்பம் - affliction

'போழ்படப் பிளந்து வாளில்

புரட்டியிட் டரியக் கண்டே

ஆழ்கல மாந்தர் போல வணிநகர்

அழுங்கிற்றன்றே ' (சீவக. 1163: 3-4)

(ஐ) கடலில் கலம் கவிழ்தல்

Katalil kalam kaviltal (ship

sinking at sea)

துன்பம் - distress

'மறிகடலில் கலம் கவிழ்த்தார்

போல நின்றேன்' (பெரிய 2384: 2)

(ஓ) பண்டம் களை கலம் Pantam

kalai kalam (unloaded ship)

(18) வெறுமை - empty, desolate, bare

'கலிகெழு பண்டம் களை கலம்

போல வலிகெழு சிறப்பின்

மதிலுஞ் சேனை உள்ளகம்

வறுமை எய்திப் புல்லென'

(பெருங்.இலா.8: 123-125)

(ஓ) தோணி Toni

(19) துணை / உதவி - support / help

'ஏணியை இடர் கடலுள் கழிக்கப்

பட்டிங் கிளைக்கின்றேற்

கக்கரைக்கே ஏற வாங்கும்

தோணியைத் தொண்டனேன் தூய

சோதி' (திருநா. தேவா.739: 3-5)

(20) மீட்சி - rescue

'துன்பக் கடல் புக்கு வைகுந்தன்

என்பது ஓர் தோணி பெறாது

உழல்கின்றேன்' (நாலா.548: 3-4)

(ஔ) மயங்குகால் எடுத்த வங்கம்

(கடுங்காற்றினால் அலைக்கப்பட்ட

மரக்கலம்) Mayankukal etutta vankam

துன்பம்


153