பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரி

'மயங்குகால் எடுத்த வங்கம்

போலக் காழோர் கையற

மேலோரின்றி' (மணி.4:34-35)

(க) வங்கம் Vaikam

(21) வருவாய்

'வங்க வாரியும் வார் அலை

வாரியும்' (சூளா.32: 3)

(ஒப்பு) Boat, Canoe, Sail, Ship

அரசுரிமை, ஆன்மா ,

இனப்பெருக்க வளம், கடற்பயணம்,

கடந்தநிலை, கருப்பை, காற்று,

செல்வ வளம், துணிவான செயல்,

தேவாலயம், நற்பேறு, நம்பிக்கை,

நிலைபேறு, நீண்ட வாழ்நாள்,

நிலைமாற்றம், பாதுகாப்பு, மகிழ்ச்சி,

மீட்பு, வலிமை, வளமை, வெற்றி,

வாணிபம்; இடையூறு, இறப்பு,

நிலையற்ற தன்மை.

திரி Tiri (wick)

(1) உயிர் - life, soul

'உயிர் திரியா மாட்டிய தீ' (கலி.

142:40)

திரிசூலவேல் Tirculavel (trident)

(1) கூர்மை - sharp

'கூர் விளங்கும் திரிசூலவேலர்

குழைக்காதினர்'

(திருஞான. தேவா.4024: 1)

திரியழல் Tiriyalal (flame, lamp)

(1) வழிபாடு, கடவுட்டன்மை , கல்வி

- worship, divine, education

'திரியழல் காணில் தொழுப

விறகின் எரியழல் காணின் இகழ்ப

- ஒருகுடியில் கல்லாது மூத்தானைக்

கைவிட்டுக் கற்றான் இளமை

பாராட்டும் உலகு' (நான்.66) -

திரு Tiru (goddess of wealth)

(1) நன்மை

'பெருவரை அன்ன திருவிறல்

வியல் மார்பு' (ஐங். 220: 3)

(2) புகழ்

“சிலம்பாறு அணிந்த சீர்கெழு

திருவிற்'

(பரி, 15:22)


திரு


(3) அழகு

'திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த்

திருநலம் தோற்றாளை' (கலி. 135:

12)

(4) செல்வம்

‘திருநிலை இய பெருமன் எயில்'

(பட், 291)

(5) சிறப்பு, நன்மை

'திருநிலை பெற்ற தீதுதீர்

சிறப்பின்' (நெடுநல், 89)

(6) பெருமை

'செருமிக்குப் புகலும் திருவார்

மார்பன்' (மலைபடு. 356)

(9) நிலையாமை - unstable

'மாரியும் திருவும் மகளிர் மனமும்

தக்குழி - நில்லாது பட்டுழிப்

படுமெனும்' (பெருங். உஞ்.35: 156-

157)

(ஆ) செய்யோள் Ceyyo!

செல்வம்

செய்யோள் நீங்க, சில் பதம்

கொழித்து ' (அகம். 316:137)

(இ) செய்யவள் Ceyyaval

செல்வம்

'அவ்வித்து அழுக்காறு

உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்' (குறள்.

167)

(ஈ) செய்யாள் Ceyyal

செல்வம்

'கைத்துடையான் காமுற்றது

உண்டாகும் வித்தின்

முளைக்குழாம் நீருண்டேல்

உண்டாம் திருக்குழாம்

ஒண்செய்யாள் பார்த்துறின்

உண்டாகும் மற்றவள் துன்புறுவாள்

ஆகிக் கெடும்' (நான். 67)

(உ) நல்லாள் Nallal

செல்வம்

'பிறக்குங்கால் பேரெனவும் பேரா

இறக்குங்கால் நில்லெனவும் நில்லா

உயிரெனைத்தும் - நல்லாள்

உடம்படின் தானே பெருகும் -

கெடும்பொழுதில் கண்டனவும்

காணா கெடும்' (நான். 43)


154