பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீ பொங்கும்

'தட்டைத் தீயின் ஊர் அலர்

எழவே ' (ஐங். 340:4)

(8) அழிவு -

'பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர்

நிகழ்வின் மடங்கல் தீயின்

அனையை' (பதி, 72:14-15)

(9) சினம்

'செறு தீ நெஞ்சத்துச் சினம்

நீழனோரும்' (பரி. 5:73)

(10) அன்பு, காமம்

'பாய் இருள் அற நீக்கும் நோய் தபு

நெடுஞ் சுடர்த் தீயினால் சுடுதலோ

இலர்மன்; ஆயிழை! தீயினும்

கடிது, அவர் சாயலின் கனலும்

நோய்' (கலி. 137:20-22)

(11) பொய்

குன்று அகல் நல்நாடன்

வாய்மையில் பொய் திங்களுள்

தீத்தோன்றியற்று' (கலி, 41:23-24)

(12) பசி

'மதுகை இன்றி, வயிற்றுத் தீத்

தணிய தாம் இரந்து உண்ணும்

அளவை ' (புறம், 74:5-6)

(13) திறல் | வெற்றி

'தீ எழுந்தன்ன திறலினர்'

(திருமுரு. 171)

(13) கடுஞ்சொல்

'தீயினால் சுட்ட புண் உள்ளாறும்

ஆறாதே நாவினால் சுட்ட வடு'

(குறள்.129)

(14) அச்சம்

'தீயவை தீய பயத்தலான், தீயவை

தீயினும் அஞ்சப்படும்' (குறள். 202)

(15) பகை

'அகலாது அணுகாது தீக்காய்வார்

போல்க இகல் வேந்தர்ச்

சேர்ந்தொழுகு வார்' (குறள். 691)

(16) தூய்மை

'தீயின் தூயவளைத் துயர்

செய்ததால்' (கம்ப.சுந்.1137: 4)

(17) கற்பு

‘தீயைச் சுட்டது ஓர் கற்பு எனும்

தீயினாள்' (கம்ப.சுந்.1080: 4)

(20) கொடிய தன்மை

'தீமனத்து அரக்கர் திறல்

அழித்தவனே' (நாலா. 1272: 1)

(ஆ) உலையூகம் தீ Ulaiutum ti

சினம்


தீ

'நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார்

என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு

நோக்குங்கால் கொல்லன்

உலையூதும் தீயேபோல்

உள்கனலும் கொல்லோ தலையாய

சான்றோர் மனம்' (நாலடி.298)

(இ) தீ இயல்பு மாறல் Ti iyalpu

maral

(16) அரிய தன்மை - unnatural, rare

'... ... ... ..நீர்த்தீப் பிறிழினும்'

(குறு. 373:1)

(ஈ) எரி Eri

(17) காமம் - love, passion

'கண்தர வந்த காம ஒள்எரி'

(குறு. 305:1)

ஒளி - gloss

'பொரி கால் மாஞ் சினை புதைய

எரி கால் இளந் தளிர் ஈனும்

பொழுதே!' (ஐங். 349:2-3)

சிவப்பு

'எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல்

மலர்' (ஐங். 368:1)

அழிவு

'யாண்டு தலைப் பெயர வேண்டு

புலத்து இறுத்து முனை எரி

பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு'

(பதி. 15:1-2)

சீற்றம்

'எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ்

சீற்றத்து' (பதி. 1:7)

வெம்மை

'வெம்மை தண்டா எரி உகு

பந்தலை' (அகம். 29:15)

(18) துன்பம் / இன்னாமை

'இணர் எரி தோய்வன்ன இன்னா

செயினும்' (குறள். 308)

(உ) அழல் Alal

சிவப்பு

'அழல் போல் செவிய சேவல்

ஆட்டி ' (நற். 352:4)

அழிவு

'அழல்கவர் மருங்கின் உருஅறக்

கெடுத்து' (பதி. 15:7)

(19) தூய்மை

'அழல் வினை அமைந்த நிழல் விடு

கட்டி கட்டளை வலிப்ப

(பதி. 81:16-17)


157