பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரும்பு


(9) காம இன்பம் - sexual pleasure

'ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்

பெறும், வை மருப்பின்'

(கலி. 104:20)

(ஒப்பு) Sleep அறிவு நுட்பம்,

உடலை விட்டு ஆன்மா

வெளியேறுதல், படைப்பு,

புனிதநிலை, மறுஎழுச்சிக்குரிய

தேவை; அபாய நிலை, இறப்பு,

பாலியல்,

துரும்பு Turumpu (scrape)

(1) அற்பம் - worthless, negligible

'போந்த உதாரனுக்குப் பொன்

துரும்பு' (தனிப்.65: 1)

துவர்க்காய் தவறப் பழுக்காய் பெறல்

Tuvarkkay tavarap palukkay peral

(discard berry and get fruit)

(1) நன்மை - good

'வம்பவிழ் கோதை தந்த வான்

துவர்க் காயை வீழ்த்தோர்

செம்பழுக் காயை வாங்கித்

திருநலத்து எடுத்துக் கொண்டாங்கு

அம்பழ நீண்ட வாட்கண் அலமரு

மணிசெயம் பூங்கொம்படு

நுசுப்பினாய்க்குத் தந்தனென்

பேணிக் கொண்டாய்' (சீவக. 1128)

துழாஅய் Tulaay (basil)

(1) உயர்வு - lofty

'வண்டு ஊது பொலி தார், திரு

ஞெமர் அகலத்து, கண்பொரு

திகிரி, கமழ் குரல் துழாஅய்

அலங்கல், செல்வன் சேவடி பரவி'

(பதி. 31:7-9)

(2) சிறப்பு - eminence

'நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க்

கண்ணியை' (பரி, 4:59)

(ஆ) துழாய் மாலை Tulay malai

(3) திருமால் - vishnu

தொல்மாண் துழாய்மாலை யானைத்

தொழலினிதே' (இனியவை.கட.வா:2)

(இ) துளவம் Tulavam


தூண்


(4) மேன்மை , புனிதம் - excellence /

sacred

'துளவம் சூடிய அறிதுயிலோனும்'

(பரி. 13:29)

(ஈ) துளபம் Tulapam

(5) நறுமணம் - fragrance

'மெய்யனர் துளப விரையார்

கமழ்நீள் முடி' (நாலா.933: 3-4)

(ஒப்பு) Basil தீமைகளிலிருந்து

பாதுகாப்பு, மருத்துவ இயல்பு,

வளமை.

துறு பறித்தல் Turu parittal

(1) பிறப்பறுத்தல், வினைநீக்கல்

'அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோடு அஞ்சும் நான்கும்

துறுபறித்து அனைய நோக்கிச்

சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்'

(சுந். தேவா .926: 1-2)

தூண் Tin (pillar)

(1) உறுதி - firmness

'தட மருப்பு எருமை மட நடைக்

குழவி தூண் தொறும் யாத்த காண்

தகு நல் இல்' (நற். 120:1-2)

(2) வலிமை - strength

'கயிறு அரை யாத்த காண் தகு

வனப்பின் அருங் கடி நெடுந் தூண்

போல' (அகம். 220:7-8)

(3) பாரம் தாங்குதல் – bear burden /

load

'இன்பம் விழையான் வினை

விழையான் தன் கேளிர் துன்பம்

துடைத்து ஊன்றும் தூண்'

குறள். 615)

(4) ஆதாரம், அடிப்படை - foundation

| basic

'அன்பு நாண் ஒப்புரவு

கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்'

(குறள். 983)

(5) வலிமை, நிலைபேறு - strong,

stable

'நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்

நட்டமைந்த தூணின்கண் நிற்குங்

களிறு' (நான். 90:3-4)

(6) திரட்சி - plumb

163