பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடி

(17) துன்பம் - Sorrow

'காதின கனகப் பைந்தோடும்

கைவெள் வளைகளும் கழல .. .. ..

வேதனை பெரிதுடைத்து அடிகள்

விளிகவிப் பிறப்பென உரைத்தார்'

(நீலகேசி.73: 1,4)

(ஓ) வளை நெகிழ்தல் Valai nekiltal

(13)தனிமை, பிரிவு, இரங்கல்

'இளையிருள் பரந்ததுவே எற்செய்

வான் மறைந்தனனே களைவரும்

புலம்புநீர் கண்பொழீஇ

உகுத்தனவே தளையவிழ்

மலர்க்குழலாய் தணந்தார்

நாட்டுளதாம்கொல் வளை நெகிழ

வெரிசிந்தி வந்த இம்

மருண்மாலை' (சிலப். 7.40)

(ஔ) பொன் தொடி தகர்த்தல்

Pon toti takarttal

(14)அவலம்

'திருத்தலு மில்லேன் நிற்றலும்

இலனெனக் கொற்றவை வாயில்

பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை

வாயில் கணவனொடு புகுந்தேன்

மேற்றிசை வாயில் வறியேன்

பெயர்கென இரவு பகலும்

மயங்கினள்' (சிலப்.23: 180-184)

(க) வளை கொள்வது Valai kolvatu

துன்பம்

'நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு

இட்ட மிக்க தையலை வெள்வளை

கொள்வது தொக்க நீர்வயல்

தோணி புரவர்க்குத் தக்கது அன்று

தமது பெருமைக்கே'

(திருநா.தேவா.429)

(ங) வளை நீக்குதல் Valai nikkutal

(15)கைம்மை

புண்ணியன் பொன்றினானேல்

வெறிகுலாய்க் கிடந்த மாலை

வெள்வ பொறிகுலாய்க் கிடந்த

மார்பின் ளை முத்தம் நீக்கி

நெறியினால் நோற்றல் ஒன்றோ

நீள் எரி புகுதல் ஒன்றோ

அறியலென் கொழுநன் மாய்ந்தால்

அணி சுமந்திருப்பது என்றான்'

(சீவக.7: 1706)


தொடுதோல்


(ச) வளை நீத்தல் Valai nittal

பிரிவு

'பூப்பரிவார் பொன்செய்

கலம்பரிவார் பொன்வளையை

நீப்பிர் எனப்புடைப்பார்

நீள்தாமம் சிந்துவார்' (சீவக.2965;

1-2)

தொடுதோல் (செருப்பு) Totuthl

(1) உடைமை - posession

'தொடுதோற் கானவன் கவை

பொறுத்தன்ன' (அகம். 34:3)

(ஆ) அடிபுதை அரணம் Ati putai

aranam

(2) பாதுகாப்பு - safety, protect

'அரும்பொருள் அருத்தும், திருந்து

தொடை நோன்தாள் அடிபுதை

அரணம் எய்தி' (பெரும். 68-69)

(இ) செருப்பு Ceruppu

(3) கீழ்மை | தாழ்வு - low, mean

'மைதீர் பசும்பொன்மேல் மாண்ட

மணியழுத்திச் செய்தது எனினும்

செருப்புத்தன் காற்கேயாம் எய்திய

செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப் படும்'

(நாலடி.347)

(4) அடிமை - slave

'ஆசான் என்னும் சொல்

பிறிதாமோ அண்ணல் குமரற்கு

அடிச்செருப்பு ஆகென'

(பெருங். உஞ்.36: 309-310)

(ஈ) பாதுகை Patukai (ownership,

right)

(5) அரசத்தன்மை, செல்வம்

royality, wealth

'அனைய னாய பரதன்

அலங்கலின் புனையும் தம்முனார்

புனையும் பாதுகைப் பூசனை'

(கம்ப.யுத்த.4100: 1-2)

(உ) தொடுகழல் Totukalal

(6) உடைமை - possession

'தொடுகழல் செம்பொன் மோலி

சென்னியில் சூட்டிக்கொண்டான்'

(கம்ப யுத்த.449: 4)


170