பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடை

(17) காதல் - love

விரை மலர் அம்பினோன்'

(பரி. 22:26)

(உ) அம்பும் வில்லும் Ampum

villum (bow and arrow)

(18) ஆற்றல், பெருமை - power,

greatness

வரி சிலை வய அம்பினவை'

(பரி. 15:60)

(19) அழிவு -

'சிலை மாண் வல் வில் சுற்றி, பல

மாண் அம்புடைக் கையர் அரண்

பல நூறி நன் கலம் தரூஉம் வயவர்

பெருமகன் சுடர் மணிப் பெரும்

பூண் ஆஅய் கானத்து'

(அகம். 69:15-18)

(ஊ) E

(20) துன்பம் - Sorrow

'ஏ மான் பிணையின்

வருந்தினெனாக' (நற். 61:3)

(21) விரைவு, வேகம் - quick, speed

'ஏத்தொழில் நவின்ற எழில்நடைப்

புரவி' (அகம். 160:11)

(22) ஆபத்து - danger

'நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப்

புக்கால் மெலிந்தொருவர் வீழாமை

கண்டு - மலிந்தடைதல்

பூப்பிழைத்து வண்டு புடையாடும்

கண்ணினாய் ஏப்பிழைத்துக்

காக்கொள் ளுமாறு'

(பழமொழி. 309)

(எ) பகழி Pakali

(23) கொடுமை - cruel

'பச்சூன் பெய்த பகழி போல'

(நற். 75:7)

விரைவு - speed

'ஆட்டு அயர்ந்து - அரி படும் ஐ

விரை மாண் பகழி' (பரி. 10:97)

(24) துன்புறுதல் - suffer

'அதர் கூட்டுண்ணும் அணங்குடைப்

பகழி' (அகம். 167:8)

கூர்மை - sharp

'குறுகினன் தொடுத்த கூர்வாய்ப்

பகழி' (அகம். 248:7)

(25) கொலைத்தன்மை - killing

'கடுங்கண், மறவர் பகழி

மாய்த்தென' (அகம். 297:6)


தொடை


விரைவு - speed

'நொவ்வு இயற் பகழி பாய்ந்தென

(அகம். 388:11)

(26) ஆற்றல் - power

'வேழம் வீழ்த்த விழுத் தொடைப்

பகழி' (புறம். 152:1)

(ஏ) வாளி Valil

(27) கொலை - killing

'செங்கோல் வாளிக் கொடு வில்

ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த்

திறம் பெயர்த்தென' (நற். 164:6-7)

விரைவு - speed

'சிலைமாண் கடுவிசைக்

கலைநிறத்து அழுத்திக் குருதியொடு

பறித்த செங்கோல் வாளி'

(குறு. 272:5-6)

கூர்மை - sharp

'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ்

சிலை மறவர் வை வார் வாளி

விறற் பகை பேணார்'

(குறு. 297:1-2) |

(28) சீற்றம் - rage, wrath

'செருச் செய்த வாளி சீற்றத்தவை

அன்ன ' (பரி, 20:37)

(ஐ) கணை Kanai

(29) வலிமை - strength

'.. .. .. .. உரவுக் கணை வன் கைக்

கானவன் வெஞ் சிலை வணக்கி'

(நற். 285:2)

(30) செம்மை - straight

'செங் கணை தொடுத்த செயிர்

நோக்கு ஆடவர்' (நற். 298:2)

விரைவு - quickness

'ஒடுங்கார் உடன்றவன் தானை வில்

விசை விடும் கணை ஒப்பின் கதழ்

உறை சிதறுஉ' (பரி. 22:5-6)

துன்புறுதல் - affliction -

'பணை அமை பாய்மான் தேர்

அவன் செற்றார் நிறம் பாய்ந்த

கணையினும், நோய் செய்தல்

கடப்பு அன்றோ ?' (கலி. 57:14-15)

(31) இறப்பு - death

'பாம்பு ஊன் தேம்பும் வறம்கூர்

கடத்திடை, நீங்கா வம்பலர்

கணை இடத் தொலைந்தோர்'

(அகம். 313:12-13)

கொடுமை - cruel











172